இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் சேமிப்பதில் ஆர்வம் காட்டி தருகிறார்கள். அவர்களுக்காக வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் ஏராளமான சேமிப்பு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. அதன்படி சீனியர் சிட்டிசன்களுக்காக அஞ்சல் அலுவலகத்தில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்தத் திட்டத்தில் இணைவதன் மூலம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 20,500 ரூபாய் தொகையை மூத்த குடிமக்கள் பெற முடியும். 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களால் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் ஓய்வுக்குப் பிறகு சீனியர் சிட்டிசன்கள் கவலைப்பட வேண்டாம்.
மூத்த குடிமக்கள் தங்களுடைய வழக்கமான வருமானத்தை இழக்கக்கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டத்தை அஞ்சல் அலுவலகம் செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்திற்கு தபால் அலுவலகத்தில் தற்போது 8.2 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் ஒருவர் 15 லட்சம் டெபாசிட் செய்வதன் மூலமாக மாதந்தோறும் ரூ.10,250 வருமானமாக பெறலாம். இதில் அதிகபட்சமாக 30 லட்சம் முதலீட்டிற்கு வட்டியாக ஒவ்வொரு ஆண்டும் ரூ.2,46,000 கிடைக்கும்.
இதன் மூலம் ரூ.20,500 தொகையை மாத வருமானமாக பெறலாம். காலாண்டு அடிப்படையில் 61,500 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களில் முதல் தேதியில் வட்டி வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும். டெபாசிட் செய்யக்கூடிய தொகையை பொறுத்து ஒவ்வொரு மாதமும் பணம் அல்லது வட்டி முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும்.
இந்திய அரசால் மூத்த குடிமக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் சேமிப்பு திட்டம் தான் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம். எனவே இந்த திட்டத்தில் செலுத்தப்படும் தொகை பாதுகாப்பாகவும் உத்தரவாதமான வருமானம் கிடைக்கக்கூடியதாகவும் இருக்கும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயிலிருந்து அதிகபட்சம் 30 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து உங்களுடைய சேமிப்பு கணக்கை தொடங்கலாம். ஓய்வு பெற்றவர்கள் மட்டுமல்ல விஆர்எஸ் எடுத்தவர்களும் கூட மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் இணையலாம்.
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…