சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் ராதிகா ப்ரீத்தி. இந்நிலையில் ராதிகா ப்ரீத்தி தான் ஏன் சீரியலில் இருந்து விலகினேன் என்பது குறித்து ஒரு பேட்டியில் கூறியிருந்தார். பலர் அசீமோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத்தான் ராதிகா விலகி விட்டதாக கூறினார்.
அதனை ராதிகா தற்போது மறுத்திருக்கிறார். ராதிகா அளித்த பேட்டியில் கூறியதாவது, எல்லோரும் நினைப்பது போல் எனக்கும் அசீமிற்கும் சண்டை கிடையாது. நிஜமான பிரச்சனை எனக்கும் தயாரிப்பு குழுவிற்கும் தான். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக சம்பளம் கொடுக்காமல் நடிக்க வைத்தனர். சம்பள பணத்தை வாங்குவதற்கு நான் மிகவும் சிரமப்பட்டேன்.
இதை எல்லாம் தாண்டி சூட்டிங் ஸ்பாட்டில் சில அசௌகரியங்கள் நேர்ந்தது. அதுவே நான் சீரியலில் இருந்து விலகுவதற்கு முக்கிய காரணம். ஒரு வீடு எடுத்து தருவதாக கூறி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஹோட்டலிலேயே தங்க வைத்தார்கள். இரண்டு வருடம் ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தேன். சமீபத்தில் எனக்கு அறுவை சிகிச்சை கூட செய்யப்பட்டது.
எல்லாத்திற்கும் மேலாக ஆண்கள், பெண்கள் என அனைவரும் ஒரே கழிவறையை பயன்படுத்தினோம். இதற்கிடையே கழிவறைக்கு சென்று வர சிறிது நேரம் ஆகிவிட்டால் சிறுநீர் கழிக்க எவ்வளவு நேரம் என மைக்கில் அனைவர் காதில் படும்படி கேட்பார்கள். நிறைய தர்ம சங்கடமான சூழ்நிலைகளை அனுபவித்தேன். சிறுநீர் தொற்று தொடர்பான வியாதிகளும் வரும். ஒரு கட்டத்தில் தாக்குப் பிடிக்க முடியாமல் சீரியலில் இருந்து விலகி விட்டேன் என அவர் கூறினார்.
திமுகவின் மூத்த தலைவரும் எம்பியுமான ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த், அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளது…
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் (பொறுப்பு) ராஜேந்திர அர்லேகரை…
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் என்றாலே உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மட்டுமின்றி, பல்வேறு துறை பிரபலங்களும் நேரில் சென்று…
திருச்சி கிழக்கு தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடப் போவதாக எழுந்த வதந்திகளுக்கு அவரே முற்றுப்புள்ளி…
தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டம் பெரும்…
சின்னத்திரை மற்றும் சினிமா உலகில் சமீப காலமாக இளம் வயது பிரபலங்களின் மரணங்கள் தொடர்கதையாகி வருவது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை…