திருச்சியில் நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டைக் கொண்டாடும் வகையில், தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டிருந்த அவரது கட்-அவுட்டிற்கு ரசிகர் ஒருவர் கோழியைப் பலியிட்டு ‘ரத்தக்காவு’ கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் ஜூலை 23 வெளியான இத்திரைப்படத்தைக் காணத் தமிழகம் முழுவதிலும் உள்ள தியேட்டர்களில் விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினர் பால் அபிஷேகம் செய்து உற்சாகமாகக் கொண்டாடி வந்தனர். அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள தியேட்டர் ஒன்றின் முன்பாக கையில் கோழியைப் பிடித்துக் கொண்டு, அதன் தலையை அறுத்து பீறிட்டு வந்த ரத்தத்தைக் கட்-அவுட் மீது ஊற்றி அபிஷேகம் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகிப் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ரசிகரின் இந்த விபரீதமான செயலுக்குச் சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும், நெட்டிசன்களும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். திரைப்பட வெளியீட்டின் போது ரசிகர்கள் இதுபோன்ற முட்டாள்தனமான மற்றும் அருவருக்கத்தக்கச் செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் எனப் பலரும் அறிவுறுத்தி வருகின்றனர். சென்சார் சிக்கல்களுக்குப் பிறகு வெளியான இத்திரைப்படம், ரசிகர்கள் மற்றும் தவெக அமைச்சர்களின் அமோக ஆதரவோடு இந்தியாவில் மட்டும் முதல் நாளில் சுமார் ரூ 41 கோடியும், உலகளவில் ரூ 78 கோடியும் வசூலித்து சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…