இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடப்படக்கூடிய முக்கியமான பண்டிகைகளில் ஒன்று பொங்கல். தமிழகத்தில் தமிழர் திருநாளாகவும் மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி ஆகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் என்றாலே பொங்கி வழிதல், பொங்குதல் என்று பொருள். ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகை பிரம்மாண்டமாக கொண்டாடப்படும். தமிழகத்தில் நான்கு நாட்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். மார்கழி மாதத்தின் கடைசி நாளில் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்த நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தை மாதத்தின் முதல் நாளில் சூரியனை வழிபடுவது சிறப்பாகும். 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரும் பொங்கல் பண்டிகைக்கு எத்தனை நாட்கள் விடுமுறை கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு பள்ளி மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதாவது ஜனவரி 15 வியாழக்கிழமை தைப்பொங்கல், ஜனவரி 16 வெள்ளிக்கிழமை திருவள்ளுவர் தினம், ஜனவரி 17 சனிக்கிழமை உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது. ஜனவரி 18 ஞாயிற்றுக்கிழமை வந்து விடுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாள் அதாவது ஜனவரி 14-ஆம் தேதி புதன்கிழமை போகி பண்டிகை என்பதால் அன்றைய தினம் ஒவ்வொரு வருடமும் அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை அளிக்கும் பட்சத்தில் மொத்தம் பொங்கலுக்கு ஐந்து நாட்கள் விடுமுறையாகும்.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…