தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பூபா என்பவருக்கும், ஷெரிப் என்ற காவலருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது தகாத உறவாக மாறியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் ஷெரிப்பிடம் இருந்து 3 லட்ச ரூபாய் பணத்தை பூபா கடனாகப் பெற்றிருந்தார். இதற்கிடையே ஷெரிப்பிற்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றதால், அவர் தான் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார். ஆனால் பணத்தை தர மறுத்த பூபா, தங்களது கள்ளக்காதல் குறித்து வருங்கால மனைவியிடம் கூறி திருமணத்தை நிறுத்திவிடுவேன் என ஷெரிப்பைத் தொடர்ந்து மிரட்டியுள்ளார்.
இந்த மிரட்டலால் பயந்துபோன காவலர் ஷெரிப், பூபாவை நிரந்தரமாக ஒழித்துக்கட்ட முடிவு செய்தார். ஆடு வளர்ப்பதற்கான வங்கி மானியக் கடன் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி, அவரை ஆட்டுக்கொட்டகைக்கு வருமாறு அழைத்துள்ளார். அப்போது பூபாவுடன் அவரது கணவர் நாகுலுவும் சென்றதால், இருவரையும் தீர்த்துக்கட்ட முடிவெடுத்த ஷெரிப், சுந்தர் என்ற நபரின் உதவியை நாடினார். திட்டமிட்டபடி கொட்டகைக்கு வந்த கணவர் நாகுலுவை முதலில் கட்டையால் அடித்துக் கொன்று குழியில் புதைத்த ஷெரிப், பின்னர் அங்கு வந்த பூபாவை ஏமாற்றி அவருடன் உல்லாசமாக இருந்துவிட்டு அவரையும் அடித்துக் கொன்று மற்றொரு குழியில் புதைத்து கொடூரத்தை அரங்கேற்றினார்.
கணவன், மனைவி இருவரும் படுகொலை செய்யப்பட்டது குறித்துக் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. விசாரணைக் குழுவில் கொலையாளியான ஷெரிப்பும் ஒன்றும் தெரியாதது போல நாடகமாடி இணைந்து கொண்டார். இருப்பினும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைப் போலீசார் ஆய்வு செய்தபோது அதில் சுந்தர் சிக்கினார். அவரிடம் காவல் துறையினர் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், காவலர் ஷெரிப் செய்த இந்த இரட்டைக்கொலை அம்பலமானது. இதனையடுத்து கொலையில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களைச் சிறையில் அடைத்தனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள காஜுவாக்கா பகுதியில், போக்குவரத்துத் துறை பெண் ஆய்வாளர் பார்வதி என்பவரின் வாகன ஓட்டுநர்,…
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ரா பகுதியில், 40 வயதான ராஜேஷ் என்பவரை அவரது மனைவி விமலா கத்தியால் பலமுறை குத்திக் கொடூரமாகக்…
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த ரேவதி (45) என்பவருக்கு திடீரெனக் கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.…
தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக இரவு நேரத்தில் உணவு அல்லது பொருட்களை விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த பெண் ஊழியர்…
உணவுப் பொருட்கள் தயாரிப்பில் கால்களால் மாவை மிதித்துப் பிசையும் அதிர்ச்சிகரமான காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி…
தமிழக வெற்றிக் கழகத்தில் மேலும் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இணையத் தயாராக இருப்பதாக தவெக நிர்வாகி செங்கோட்டையன் பேசிய பேச்சு,…