திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் புதிய கண்காணிப்பு கேமராக்கள் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் ராம்குமார் மற்றும் மாவட்ட செயலாளர் சங்கர் ஆகியோர் போலீசாருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இதனை அங்கிருந்த தவெகவினர் வீடியோவாகப் பதிவு செய்து, நடிகர் விஜய்யின் ‘தெறி’ திரைப்பட பிஜிஎம் (BGM) இசையை பின்னணியில் சேர்த்து ரீல்ஸாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையிலும், அக்கட்சியினரின் ரீல்ஸ் மோகம் குறைந்தபாடில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. “ரீல்ஸ் போட்டு ஆட்சியைப் பிடித்த கட்சி” என்று விமர்சனங்கள் எழுந்தாலும், அமைச்சர்கள் முதல் எம்.எல்.ஏக்கள் வரை ஆய்வுக்குச் செல்லும் இடங்களிலெல்லாம் ரீல்ஸ் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். முன்னதாக, விஜய் தலைமைச் செயலகத்தில் மதிய உணவை கேரியரில் வைத்து சாப்பிடுவது போன்ற ஏஐ (AI) படங்களை உருவாக்கி தவெகவினர் பரப்பியது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமன்றி, அரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு செய்வது போன்றும், அம்மா உணவகங்களில் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்வது போன்றும் தவெகவினர் அட்ராசிட்டி செய்து வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தவெக சட்டமன்ற அலுவலகம் திறக்கப்பட்டபோது, எம்.எல்.ஏ நாற்காலியில் அமர்ந்து தொண்டர்கள் ரீல்ஸ் எடுத்தனர். மேலும், மாநகராட்சி அலுவலகங்களுக்குச் சென்று அங்கிருக்கும் அரசு அதிகாரிகளுக்கு தவெக நிர்வாகிகள் ஆலோசனை வழங்குவது போன்ற வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தனர்.
காவல் நிலையத்திற்குள்ளேயே சென்று தவெகவினர் இப்படி ரீல்ஸ் வீடியோ எடுத்து பதிவிட்ட சம்பவத்திற்கு நெட்டிசன்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். தவெகவினரின் இந்த எல்லையற்ற அட்ராசிட்டியைத் தடுக்க முடியாமல் போலீசாரே தவித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், தொடர்ந்து அரங்கேறும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் வெறுப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகின்றன.
தமிழக அரசு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களையும் அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. தற்போது ஆசிரியர்கள் தரப்பில்…
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தலைமையில் சென்னையில்…
தமிழக அரசியலில் கட்சி தாவும் படலங்கள் நாளுக்கு நாள் அதிரடி திருப்பங்களை சந்தித்து வருகின்றன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிலிருந்து முன்னாள்…
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து முற்றிலும் விலகி 'வீ தி லீடர்'…
தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் பரபரப்புகள் உச்சக்கட்டத்தை எட்டி வரும் நிலையில், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள்…
அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல் மற்றும் அதிருப்தி காரணமாக, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மாற்று முகாமிற்கு நகரத் தொடங்கியுள்ளனர்.…