கடலூர் மாவட்டம் லால்பேட்டை சோதனை சாவடியில் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது போலீஸ் இன்ட்ரஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஒரு கார் புதுச்சேரியில் இருந்து கடலூரை நோக்கி வேகமாக வந்தது. அந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது காரில் வந்தவர்கள் மது போதையில் இருந்தது தெரியவந்தது. எஸ்பி ஜெயக்குமார் அவர்களிடம் காரில் ஏன் போலீஸ் என்று ஒட்டி வைத்திருக்கிறாய் என டிரைவரிடம் கேட்டுள்ளார்.
அதற்கு அவர் என் மனைவி போலீசாக உள்ளார் என பதில் அளித்தவுடன் “உன் மனைவி போலீஸ் ஆக இருந்தால் நீ எப்படி காரில் போலீஸ் என்று ஒட்ட முடியும்? இது கவர்மெண்ட் வண்டியா இது? என சரமாரியாக கேள்வி எழுப்பி அந்த ஸ்டிக்கரை அகற்றுவதற்கு உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் பேசிக் கொண்டிருந்தபோதே ஒரு நபர் ஏய் யார் தெரியுமா? என் அப்பா கலெக்டர் பி.ஏ என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் கோபமடைந்த எஸ்.பி அந்த நபரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டார். போதைத் தெளிந்து அந்த நபர் “போதையில் தவறாக பேசி விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்” என அழுது புலம்பியதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து எஸ்பி கூறியதாவது, பண்டிகை காலங்களில் கொண்டாட்டங்கள் இருப்பது தவறு கிடையாது. ஆனால் அது மற்றவர்களை பாதிக்க கூடாது. இவர்களது கொண்டாட்டத்தால் மக்கள் பாதிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனக் கூறியுள்ளார்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…