எல்லா அதிகாரமும் அன்புமணிக்கு தான்… முடிவுக்கு வந்த பாமக பிரச்சனை… அடுத்த பரபரப்பு…!

Spread the love

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவருடைய மகனும் பாமக தலைவருமான அன்புமணி இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அன்புமணியை தலைவர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக அறிவித்த ராமதாஸ், அவர் இனி செயல் தலைவர் மட்டுமே என்றும் கட்சியின் நிறுவனராகவும் தலைவராகவும் நானே செயல்படுவேன் என்றும் அறிவித்துள்ளார். அதே சமயம் ராமதாஸ் மூலம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளை அன்புமணி கட்சியில் சேர்ப்பதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் அன்புமணியை ஒட்டுமொத்த அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்தும் நீக்குவதாக ராமதாஸ் அறிவித்திருந்தார். இப்படி இருவரும் மாறி மாறி அறிவிப்பு வெளியிட்டு வருவதால் பாமகவினர் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது. அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையில் ஏற்பட்ட பிரச்சனையால் பாமக இரண்டாக பிரிந்து கிடக்கிறது. இதனால்தான் பாமக இதுவரை கூட்டணி அமைக்கவில்லை.

இந்நிலையில் பாமகவின் தலைமை, சின்னம் அன்புமணியின் வசம் வந்துள்ளதன் மூலம் குழப்பம் தீர்ந்து விட்டதாக K. பாலு தெரிவித்துள்ளார். வரும் 2026 தேர்தலில் பாமக வேட்பாளர்களை அன்புமணி தான் அறிவிப்பார் எனவும், A, B படிவங்களில் அவர்தான் கையொப்பமிடுவார் என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும் ராமதாஸின் வழியை பின்பற்றிய தாங்கள் பயணிப்போம் என்ற அவர், பிரிந்து சென்றவர்கள் தங்களுடன் வரலாம் எனவும் அழைப்பு விடுத்துள்ளார். இவருடைய இந்த பேச்சு புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

“FREE ஹாஸ்டல் + மாதம் ரூ.1750 உதவித்தொகை”… தமிழக அரசு ஐ.டி.ஐ சேர்க்கை 2026… உடனே அப்ளை செய்ய லிங்க் இதோ…!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) 2026-ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.…

1 minute ago

சவுக்கு சங்கர் மீது போட்ட குண்டாஸ் ரத்து… சற்றுமுன் தமிழக அரசு அதிரடி உத்தரவு…!

தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.…

10 minutes ago

BREAKING: அடுத்த அதிரடி…. தமிழகத்தில் கடன் தள்ளுபடி… CM விஜய் உறுதி…!

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று…

15 minutes ago

“2 அமைச்சர் பதவி… ஒரு ராஜ்யசபா சீட்”… தமிழக அரசியலை தலைகீழாக மாற்றிய தவெக-வின் ஒற்றை முடிவு… வாயடைத்துப்போன திமுக…!

தமிழக அரசியலில் களம் மாறத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே புதிய…

25 minutes ago

ரேஷன் கார்டுக்கு அப்ளை பண்ணிருக்கீங்களா?… தமிழக அரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்… ரெடியா இருங்க மக்களே….!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பித்து, நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் பொதுமக்களுக்கு மிக இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது. மாநிலம் முழுவதும்…

31 minutes ago

“உண்மையான சந்தோஷம் அங்க இல்ல, இங்க தான் இருக்கு”… கேமரா முன்னாடி வந்து உடைந்து பேசிய இயக்குநர் செல்வராகவன்.. உருகிய ரசிகர்கள்…!

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான மற்றும் வித்தியாசமான இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன், தனது தனித்துவமான படங்கள் மூலம் ரசிகர்களின் மனதை…

39 minutes ago