Categories: சினிமா

‘ஒருவருக்கு ஒருவர் அழகாய்த் தெரிந்தோம் இருவரும் பார்த்த நொடியில்’… kpy சரத் மனைவி வெளியிட்ட புகைப்படங்கள்… திருஷ்டி சுத்தும் ரசிகர்கள்…

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு காமெடி நடிகர்கள் தற்போது வெள்ளித்திரையில் கால் பதித்து கலக்கி வருகின்றனர். இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த தீனா தற்பொழுது பல்வேறு படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிகழ்ச்சியில் தீனாவுடன் இணைந்து காமெடி செய்து கலக்கியவர் தான் சரத். இவர் பார்ப்பதற்கு திரைப்பட நடிகர் மொட்டை ராஜேந்திரன் போன்றே இருப்பார். இவர் தீனாவுடன் இணைந்து மொட்டை ராஜேந்திரன் போல பேசி அசத்திய காமெடிகள் அதிகம் செய்திருப்பார்.

நடிகர் சரத் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு முன்பாக விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலம் நடிகர் சிபிராஜ் நடிப்பில் வெளியான சத்யா திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு சில சீரியல்களிலும் நடித்துள்ளார் நடிகர் சரத். நடிகர் சரத் கிருத்திகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் சரத்தின் மனைவி கிருத்திகா. இவர் தற்பொழுது தனது கணவருடன் ஓணம் கொண்டாடிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Begam

Recent Posts

உயிரா? செல்போனா? 15,000 ரூபாய் போனைப் பாதுகாக்க உயிரை விட்ட வாலிபர்… நெஞ்சை உலுக்கும் வீடியோ வைரல்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு சாமானிய மனிதனின் வாழ்வாதாரப் போராட்டம்…

3 minutes ago

டிகிரி முடித்திருந்தால் போதும்… மாதம் ரூ.41,000 சம்பளத்தில் LIC-ல் வேலை.. உடனே விண்ணப்பிக்கவும்..!!

LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், நாடு முழுவதும் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய  அறிவிப்பை…

15 minutes ago

வயசான காலத்துல இது தேவையா..? “சட்டை பட்டனை போடுங்க..” ஆபாசமாக பேசிய நபருக்கு விமானப்படை அதிகாரி கொடுத்த மாஸ் பதிலடி..!!

பெண்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க வேண்டிய சமூக ஊடக வெளியில், சக பெண்ணையே ஆடை மற்றும் கண்ணியம் என்ற பெயரில்…

21 minutes ago

KG படிக்க ரூ.2.25 லட்சமா..? “டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்” தானே சொல்லி கொடுப்பாங்க… எல்.கே.ஜி கட்டணத்தைப் பார்த்து தலைசுற்றிப்போன நெட்டிசன்கள்..!!

இந்தியாவில் தனியார் பள்ளிக் கட்டணங்கள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து வருவது குறித்த விவாதத்தை இந்தச் செய்தி கிளப்பியுள்ளது. சமூக…

26 minutes ago

நெகிழ்ச்சி..! 3 மாதக் குழந்தையைத் தன் குட்டி என நினைத்து தூக்கிச்சென்ற குரங்கு… ஒன்றரை மணி நேரம் அரவணைத்த அதிசயம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஒரு குரங்கு, மூன்று மாதக் குழந்தையைத் தனது குட்டி என நினைத்து நீண்ட நேரம்…

31 minutes ago