பிரபல டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலியான போன்பே, தனது வாலட் பயனர்களுக்கான விதிமுறைகளை மாற்றியமைத்துள்ளது. இதன்படி, ஒரு பயனர் தொடர்ந்து 365 நாட்களுக்கு தனது போன்பே வாலட் மூலம் எந்தவொரு பணப்பரிவர்த்தனையும் செய்யாமல் இருந்தால், அந்த வாலட் ‘செயலற்ற கணக்கு’ என வகைப்படுத்தப்படும். அவ்வாறு செயலற்றதாக மாறும் வாலட்களுக்கு, ஜிஎஸ்டி உட்பட காலாண்டிற்கு ரூ100 பராமரிப்புக் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
முக்கியமாக, பயனர்கள் போன்பே ஆப்-ிற்குள் லாக்-இன் செய்வது, வங்கியுடன் இணைக்கப்பட்ட நேரடி யூபிஐ பரிவர்த்தனைகள் செய்வது, மொபைல் ரீசார்ஜ், மின்சார பில் மற்றும் பிற பயன்பாட்டுக் கட்டணங்களை செலுத்துவது அல்லது வாலட் கேஒய்சி புதுப்பிப்பது போன்ற பொதுவான நடவடிக்கைகள் வாலட் பயன்பாடாகக் கருதப்படாது. வாலட்டில் இருக்கும் பணத்தை நேரடியாகப் பயன்படுத்தி ஏதேனும் ஒரு பரிவர்த்தனை செய்தால் மட்டுமே அது கணக்கில் கொள்ளப்படும். இந்த புதிய கட்டணம் உங்கள் வங்கி கணக்கையோ அல்லது சாதாரண UPI பரிவர்த்தனைகளையோ பாதிக்காது, வாலட் கணக்கை மட்டுமே பாதிக்கும்.
இந்தக் கட்டணத்தை விதிப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பாகவே போன்பே நிறுவனம் பயனர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் நோட்டிபிகேஷன் மூலம் எச்சரிக்கை அனுப்பும். அந்த 15 நாள் கால அவகாசத்திற்குள் வாலட்டில் இருந்து ஒரு சிறிய தொகையை பரிவர்த்தனை செய்வதன் மூலம் வாலட்டை மீண்டும் ‘ஆக்டிவ்’ நிலைக்குக் கொண்டு வந்து இந்தக் கட்டணத்தைத் தவிர்க்கலாம். ஒருவேளை வாலட்டில் பணம் ஏதும் இல்லை என்றால் வங்கி கணக்கில் இருந்து பணம் பிடிக்கப்படாது, வாலட் இருப்பு பூஜ்ஜியமாகவே நீடிக்கும்; மைனஸ் ஆக மாறாது. வாலட்டில் தேவையற்ற பணம் இருந்தால் அதை உடனே வங்கி கணக்கிற்கு மாற்றுவது அல்லது வாலட்டை முழுமையாக மூடுவது சிறந்தது.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…