“இனி ரேஷன் பொருட்கள் கிடைக்காது… அரசு விதித்த 2 நாள் கெடு”… உங்கள் பெயர் பட்டியலில் இருக்கிறதா?…. உடனே இத பண்ணுங்க…!

Spread the love

தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான காலக்கெடு குறித்த செய்தி வெளியாகியுள்ளது. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முன்னுரிமை மற்றும் அந்த்யோதயா குடும்ப அட்டைகளில் பெயர் உள்ள உறுப்பினர்கள் அனைவரும், தங்களது கைவிரல் ரேகையை (e-KYC) பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 25-ஆம் தேதி இதற்கான கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்னும் இரண்டு நாட்களுக்குள் இந்த நடைமுறையை முடிக்க வேண்டிய கட்டாயம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த கைவிரல் ரேகை பதிவை மேற்கொள்ளாதவர்களின் பெயர்கள் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். அவ்வாறு பெயர் நீக்கப்பட்டால், அந்த உறுப்பினருக்கு வழங்கப்பட வேண்டிய அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் அளவு குறையும். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், குறைத்தீர்ப்பு முகாம்கள் ஜூன் மாதம் வரை நடைபெறாது. எனவே, பெயர் நீக்கம் போன்ற சிக்கல்கள் ஏற்பட்டால் அதை சரிசெய்ய நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்பதால், இப்போதே பதிவு செய்வது அவசியமாகும்.

வேலை அல்லது இதர காரணங்களுக்காக வெளியூர் அல்லது வெளிமாநிலங்களில் தங்கியிருப்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தின் கீழ், அவர்கள் தற்போது தங்கியிருக்கும் இடத்திற்கு அருகிலுள்ள எந்தவொரு நியாயவிலைக் கடைக்கும் சென்று தங்களது அசல் ரேஷன் கார்டைக் காட்டி கைவிரல் ரேகையைப் பதிவு செய்து கொள்ளலாம். இந்த வசதி பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்க வழிவகை செய்கிறது.

கால அவகாசம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வரவில்லை. எனவே, கடைசி நேர நெருக்கடியைத் தவிர்க்கவும், தடையின்றி ரேஷன் பொருட்களைப் பெறவும் பொதுமக்கள் மார்ச் 25-க்குள் தங்களது கைவிரல் ரேகையை அருகிலுள்ள ரேஷன் கடைகளில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன.

Nanthini

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

5 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

5 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

5 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

6 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

6 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

6 மணத்தியாலங்கள் ago