Categories: சினிமா

சிகிச்சை பெற சிரமப்பட்ட மக்கள்… மலைக்கிராமத்து மக்களுக்காக kpy பாலா செய்த மிகப்பெரிய உதவி… பாராட்டும் ரசிகர்கள்…

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர்கள் தான் பாலா மற்றும் புகழ். பாலா முதன்முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யார்?’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இவர் இந்நிகழ்ச்சியில் தனது டைமிங் காமெடி மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

இதை தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மற்றொரு நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். இந்நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் மக்களிடத்தில் வரவேற்பு பெற்றார்.இதை தொடர்ந்து சின்னத்திரையில் கலக்கிய அவர் தற்பொழுது இந்த பிரபலத்தின் மூலம் வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்துள்ளார். தற்பொழுது பல படங்களிலும் காமெடியனாக நடித்து அசத்தி வருகிறார்.

விஜய் டிவி பிரபலங்கள் பலர் அடுத்தடுத்து புது புது மாடல் கார்களை வாங்கி சமூக வலைதளங்களில் போட்டோக்களை பகிர்ந்து வருகின்றனர். புகழ், குரேஷி, மணிமேகலை, மைனா நந்தினி, சரத், டிஜே பிளாக், பூவையர் என பலரை இந்த பட்டியலில் சேர்க்கலாம். ஆனால்  சமீபத்தில் பாலா தனது பிறந்தநாளுக்கு ஒரு முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி கொடுத்திருந்தார்.


இதைத்தொடர்ந்து தற்பொழுது மீண்டும் ஒரு ஆம்புலன்ஸ் வாங்கியுள்ளார் பாலா. அதுவும் அதிலேயே ஐசியு வசதி கொண்ட ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி ஈரோடு அருகே உள்ள மலை வாழ் மக்களுக்கு கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ‘தான் இதற்காக யாரிடமிருந்தும் பணம் வாங்கவில்லை. என்னுடைய சொந்த பணத்தை போட்டு வாங்கி கொடுத்துள்ளேன்.

இங்கு 14 கிராமங்களில் 8000த்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் வெகு தூரம் சென்றால் தான் மருத்துவமனையை அடைய முடியும். அதனால் தான் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்தேன். உங்களுக்கு இது சிறிய விஷயமாக தெரியலாம். ஆனால் என்னுடைய தகுதிக்கு இது மிகப்பெரிய விஷயம்’ என்று பாலா கூறினார். இந்த விஷயத்தை அறிந்த ரசிகர்கள் ‘இதுபோன்ற மனசு யாருக்கு வரும்’ என்று அவரை பாராட்டி வருகின்றனர்.

Begam

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

9 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

10 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

10 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

10 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

10 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

10 மணத்தியாலங்கள் ago