சென்னை பல்லாவரம், மல்லிகா நகரைச் சேர்ந்த கிளின்டன் (30) என்பவர் பங்குச் சந்தை முதலீடு தொடர்பான தொழில் செய்து வந்தார். யூடியூப் நிகழ்ச்சிகளில் இவர் அளித்த ஆலோசனைகளைக் கண்டு, பலர் இவரைத் தொடர்பு கொண்டு முதலீடு செய்தனர். வில்லிவாக்கத்தைச் சேர்ந்த மோகனப்பிரியா (35) என்பவர், கிளின்டன் அறிவுறுத்தலின் பேரில் பல்வேறு தவணைகளில் 75 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார்.
பின்னர், முதலீடு இழந்ததாகவும், மேலும் பணம் தேவைப்படுவதாகவும் கிளின்டன் கூறியதால், மோகனப்பிரியா தனது கார் மற்றும் சொத்தை அடமானம் வைத்து சுமார் 75 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். மொத்தமாக மோகனப்பிரியாவிடம் சுமார் 1.5 கோடி ரூபாய் பணத்தை வாங்கிய கிளின்டன், அதைத் திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கிளின்டன் மீது மோகனப்பிரியா பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், பல்லாவரத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் கிளின்டனுக்குத் திருமணம் நடந்ததைக் கண்ட, அவரிடம் பணத்தை இழந்த மோகனப்பிரியா உள்ளிட்ட பலர் திருமண மண்டபத்திற்குத் திரண்டு வந்தனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருந்த மணமகன் கோலத்தில் இருந்த கிளின்டனைப் பிடித்து அவர்கள் சரமாரியாகத் தாக்கினர்.
அடி தாங்க முடியாமல் கோட் சூட்டில் இருந்த கிளின்டன் அங்கும் இங்கும் ஓடியதாகவும், உறவினர்கள் அவரை மீட்டு குரோம்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் சிட்லபாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மணமகன் தர்ம அடி வாங்கிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே தாயுடன் தகாத உறவில் இருந்த முதியவரை, அவரது மகனே தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால்…
இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான மக்களில், சுமார் 3.86 கோடி பேருக்குத் தங்களுக்கு அந்த நோய் இருப்பது கூடத்…
தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் 6 மாத கால நிறைவு நன்னாளில், கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் ஜோசப்…