தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அதிமுக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. ஆனால் சமீபத்தில் கரூரில் நடைபெற்ற துயர சம்பவம் விஜய்க்கு மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கியுள்ளது. இதிலிருந்து சட்டரீதியாக வெளிவர விஜய் பல ஆலோசனைகளை மேற்கொண்டு வரும் நிலையில் பாஜக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் அவருக்கு உறுதுணையாக செயல்பட்டு வருகின்றன.
இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு விஜயை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இப்படியான நிலையில் கரூர் சம்பவத்திற்கு செந்தில் பாலாஜி தான் காரணம் என்பது நாட்டுக்கே தெரியும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் பத்து லட்சம் ரூபாய் நிவாரணம், ஆனால் சாதாரண விபத்தில் இறந்தால் இரண்டு லட்சம் மட்டும்தான். இது என்ன ஆட்சி எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் NDA ஆட்சி அமையும் போது இவை அனைத்துக்கும் திமுக பதில் சொல்ல வேண்டி இருக்கும் எனவும் அவர் கூறினார்.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…