யாரு செஞ்ச வேலைடா இது..? அமைச்சரின் தலையில் கொட்டிய சூடான பாயசம்… திடீரென அலறியதால் பரபரப்பு..!!

Spread the love

கேரளாவில் கேஎஸ்ஆர்டிசி பேருந்தின் இலவசப் பயணச் சேவையைத் தொடங்கி வைத்த போது, அம்மாநில அமைச்சர் பிந்து கிருஷ்ணாவின் தலையில் எதிர்பாராதவிதமாகச் சூடான பாயசம் கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்லம் கேஎஸ்ஆர்டிசி பணிமனையில் பெண்களுக்கான ‘பிரியதர்ஷினி’ இலவச பேருந்து சேவையைத் தொடங்கி வைத்த அமைச்சர், பின்னர் அந்தப் பேருந்திலேயே பயணம் மேற்கொண்டார்.

அப்போது, யூத் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் தலைமையில் பேருந்துக்குள் இருந்த பயணிகளுக்கும் தொண்டர்களுக்கும் பாயசம் விநியோகம் செய்யப்பட்டது. பேருந்திற்குள் யூடிஎப் தொண்டர்கள் மற்றும் பயணிகள் அதிக அளவில் திரண்டிருந்ததால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலின் காரணமாகப் பாயசம் வைக்கப்பட்டிருந்த பாத்திரம் நிலைதடுமாறி, எதிர்பாராதவிதமாக அப்படியே அமைச்சர் பிந்து கிருஷ்ணாவின் தலையில் கவிழ்ந்தது.

https://twitter.com/NewsTamilTV24x7/status/2066479120192831503/video/1

பாயசம் கொட்டியதைத் தொடர்ந்து, அமைச்சருடன் இருந்தவர்கள் உடனடியாகத் துணிகள் மற்றும் ஷாலைக் கொண்டு அவரது முகம் மற்றும் தலையைத் துடைத்துச் சுத்தம் செய்தனர். இந்த விபத்தில் அமைச்சருக்கு எவ்வித தீக்காயங்களோ அல்லது உடல்நலப் பாதிப்புகளோ ஏற்படவில்லை என்றும், அவர் தனது பேருந்து பயணத்தைத் தொடர்ந்து முடித்துவிட்டுத் திரும்பினார் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலால் தற்செயலாக இந்த விபத்து நடந்ததே தவிர, இதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை என்று கட்சித் தொண்டர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

Soundarya

Recent Posts

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

8 மணத்தியாலங்கள் ago

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

8 மணத்தியாலங்கள் ago

பிறந்தநாள் கொண்டாட்டம்…! “முகத்தில் கேக் பூசிய நண்பன் குத்தி கொலை…” நண்பர்கள் தடுத்தும் கேட்காமல் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!

ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

8 மணத்தியாலங்கள் ago