Categories: சினிமா

நிச்சயம் 2-வது கல்யாணம் பண்ணிப்பேன்.. எனக்குன்னு ஒரு துணை வேண்டும்.. பவன் கல்யாண் 2-வது மனைவி ஓபன் டாக்..!

Spread the love

பவன் கல்யாண் முன்னாள் மனைவியும் நடிகை ரேணு தேசாய் விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தெரிவித்திருக்கின்றார்.

சினிமாவை பொறுத்தவரையில் நடிகர், நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துவிட்டு பின்னர் காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கம் தான். ஆனால் திருமணம் செய்து கொண்ட வேகத்திலேயே ஓரிரு வருடங்களில் விவாகரத்து என்று கோர்ட்டு படி ஏறி விடுகிறார்கள். அப்படி சினிமாவில் ரீல் ஜோடிகளாக நடித்த பின்னர் ரியல் ஜோடியாக மாறிய தம்பதியினர் தான் பவன் கல்யாண் மற்றும் ரேணு தேசாய் தம்பதி.

இவர்களும் திருமணமாகி சில ஆண்டுகளில் விவாகரத்து பெற்று இருந்தனர். பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவண் கல்யாண், நடிகை ரேணு தேசாயும் பத்ரி என்ற திரைப்படத்தில் ஒன்றாக நடித்த போது காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு முன்பாகவே இவருக்கு அக்கிரா நந்தன் என்ற மகன் இருந்தான். திருமணத்திற்கு பிறகு ஆதியா என்ற பெண் குழந்தையை பெற்றுக் கொண்டனர்.

திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். பவன் கல்யாணிக்கு ரேணு தேசாய் இரண்டாவது மனைவியாவார். அதைத்தொடர்ந்து பவன் கல்யாண் மூன்றாவதாக வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ரேணு தேசாய் ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அவர் நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிட்டு 12 வருடங்களாக தனியாக வசித்து வருகின்றார்.

தனது மகன் அக்கிரா நந்தன் மற்றும் மகள் ஆதியாவின் வளர்ப்பிலும் படிப்பிலும் முழு கவனம் செலுத்தி வருகின்றார். சமீபத்தில் நடிப்பில் கவனம் செலுத்தி வந்த இவர் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் நடுவராகவும், டைகர் நாகேஸ்வரராவ் என்ற திரைப்படத்தில் ஒரு குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார், சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த ரேணுதேசாய் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அதில் அவரிடம் இரண்டாவது திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அது குறித்து அவர் கூறியதாவது “நான் திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாகவும் நிச்சயம் இரண்டாவது திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினார். இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் திருமணம் செய்து கொள்வேன். நான் விவாகரத்து பெற்ற பிறகு இரண்டாவதாக திருமணம் செய்து கொள்வது பற்றி யோசித்தேன் .

ஆனால் குழந்தைகளின் பராமரிப்பு பற்றி யோசித்தேன். திருமணம் செய்து கொண்டால் கணவனுடன் நேரத்தை செலவிட வேண்டி இருக்கும். இதனால் தன்னுடைய இரண்டு குழந்தைகளும் தனியாக இருக்க வேண்டிய சூழல் உருவாகும். ஏற்கனவே தந்தை இல்லாமல் தவித்து வரும் குழந்தைகளுக்கு நானும் இல்லை என்றால் பல பிரச்சினைகள் அவருக்கு வந்துவிடும். அதனால் அப்போது திருமணம் வேண்டாம் என்று முடிவு எடுத்து குழந்தைகளை மட்டுமே வளர்த்து வந்தேன்.

இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் என் பிள்ளைகள் கல்லூரிக்கு சென்று விடுவார்கள் அப்போது எனக்கு சுதந்திரம் கிடைத்துவிடும். நான் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்வேன். அப்போதுதான் என் திருமணத்தை நான் அனுபவிக்க முடியும். எனக்கும் திருமண வாழ்க்கை வேண்டும். எல்லோரைப் போல தாம்பத்திய வாழ்க்கையை அனுபவிக்க விரும்புகிறேன் என்று அவர் தெரிவித்திருந்தார் .

அது மட்டும் இல்லாமல் என் குழந்தைகளும் நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். நீங்கள் யாருடன் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களோ? யார் உங்களை அக்கரையாக பார்த்துக் கொள்கிறார்களோ? அவரை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று எனது பிள்ளைகளை கூறுகிறார்கள்” என்று அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

Mahalakshmi

Recent Posts

அதிமுக காலி ஆகிறதா?… தவெக-வில் குவியும் மாஜிக்கள்… எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் விடுத்த அதிரடி எச்சரிக்கை…!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மாநிலத்தின் அரசியல் களம் முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது. குறிப்பாக, பல தசாப்தங்களாக தமிழக…

2 minutes ago

பனையூரில் குவிந்த முன்னாள் MLA-க்கள்… எடப்பாடிக்கு அதிர்ச்சி கொடுத்த ரவி மரியா… மொத்தமாக சரிந்த அதிமுக கூடாரம்….!

தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பமாக, தீவிர அதிமுக ஆதரவாளராக இருந்து கடந்த தேர்தல்களில் அக்கட்சிக்காகத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட…

3 minutes ago

BIG BREAKING: திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார்… ஸ்டாலினுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி….!

திமுகவின் மூத்த தலைவரும் எம்பியுமான ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த், அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளது…

7 minutes ago

விஜய் ஆட்சியில் ஊழலா?…. ஆளுநரிடம் ஓடிச் சென்ற நயினார் நாகேந்திரன்… பதற்றத்தில் தவெக வட்டாரம்… விஜய்க்கு வந்த புதிய சிக்கல்….!

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் (பொறுப்பு) ராஜேந்திர அர்லேகரை…

11 minutes ago

FIFA உலகக் கோப்பையில் நடந்த ட்விஸ்ட்… ஸ்பெயின் ஜெர்சியில் மியா கலிஃபா செய்த காரியம்… ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பு…!

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் என்றாலே உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மட்டுமின்றி, பல்வேறு துறை பிரபலங்களும் நேரில் சென்று…

14 minutes ago

“திருச்சி கிழக்கு டூ துணை முதல்வர் நாற்காலி”…. விசிக தொண்டர்கள் போட்ட கணக்கு…. திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு…. அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!

திருச்சி கிழக்கு தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடப் போவதாக எழுந்த வதந்திகளுக்கு அவரே முற்றுப்புள்ளி…

22 minutes ago