தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணையுமாறு நடிகர் பவன் கல்யாண் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு ஆதரவாகப் பணியாற்றுமாறு விஜயிடம் தூது அனுப்பப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் அரசியலில் நுழைந்த நாள் முதலே அவரைத் தங்கள் பக்கம் ஈர்க்க அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், இந்தத் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சந்திப்பு தொடர்பான செய்திகள் வெளியானதிலிருந்து, விஜய் எந்தக் கூட்டணியைத் தேர்ந்தெடுப்பார் அல்லது தனித்துப் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தகவல்கள் கசிந்தாலும், தவெக தரப்பில் இருந்து இது குறித்த அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான கட்சி எந்த மாதிரியான வியூகங்களை வகுக்கப் போகிறது என்பது வரும் நாட்களில் தெரியவரும்.
கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…
கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…
சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…
நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…
தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…