#image_title
நடிகை பிரகிடா ஆஹா கல்யாணம் சீரிஸில் நடித்து பிரபலமானார். மலர் டீச்சர் கதாபாத்திரம் எப்படி பிரபலமானதோ அதே மாதிரி தான் பிரகிடா பவி டீசர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். விஷால் நடித்த அயோக்கியா, விஜய் நடித்த மாஸ்டர், முகென் ராவின் வேலன் உள்ளிட்ட படங்களில் பிரகிடா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பார்த்திபன் ஒரு வித்தியாசமான முயற்சியாக இரவின் நிழல் என்ற படத்தை இயக்கினார். அந்த படத்தில் உதவி இயக்குனராக சான்ஸ் கேட்டு சென்ற பிரகிடாவுக்கு அவர் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கொடுத்தார். பிரகிடாவின் நடிப்புக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். இது மட்டுமில்லாமல் தெலுங்கில் ரிலீசான சிந்தூரம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் போது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.
இந்த நிலையில் பிரபல இயக்குனரான விக்னேஷ் கார்த்திக்குடன் பிரகிடா மாலையும் கழுத்துமாக எடுத்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. படத்தின் ப்ரோமோஷனுகாக அந்த போட்டோ வெளியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. இயக்குனர் விக்னேஷ் கார்த்தி கடந்த 2019 விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். மேலும் கிங் ஆப் காமெடி சீசன் 1 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார்.
இதனையடுத்து சன் டிவியில் ஒளிபரப்பான சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் விருந்தினர் பக்கம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 2016 ஆம் ஆண்டு பிக் FM நிகழ்ச்சியில் தொகுப்பாளராக மாறினார். நட்பதிகாரம் 79, சோலா பூரி, குற்றம் நடந்தது என்ன உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். முதன் முதலில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஏண்டா தலையில எண்ண வைக்கல படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். விக்னேஷ் கார்த்திக் அடியே, ஹாட்ஸ்பாட் படத்தை இயக்கி பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரம் அல்லம்வாரி தோட்டா பகுதியைச் சேர்ந்த 14 வயதான மாதவி, அப்பகுதியில் உள்ள…
கர்நாடக மாநிலம் புத்தூர் தாலுகா ஆர்யபு மேர்லாவைச் சேர்ந்தவர் கார்த்திக் சுவர்ண மேர்லா (27). இவர் அப்பகுதி இந்து ஜாக்ரன்…
ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சுளா என்ற பி.எட் பட்டதாரி பெண்ணும், கிருஷ்ணமூர்த்தி என்பவரும் கடந்த 10 ஆண்டுகளாகக்…
ஹைதராபாத் உப்பல் பகுதியில் வசித்து வரும் சாரதா என்ற பெண்ணுக்கு, மேடிப்பள்ளியைச் சேர்ந்த மாலோத் ரவி என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.…
குஜராத் மாநிலம் மோர்பி நகராட்சியைச் சேர்ந்த நபர் ஒருவர் கடுமையான இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வந்துள்ளார். அவருக்கு…
தெலங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டம் ஆத்மகூர் மண்டலம் அமரசிந்தா கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசங்கர் ரெட்டி. இவர் குற்ற வழக்கு ஒன்றில்…