விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீது அக்கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பசுபதி பல்வேறு அதிரடி குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார். முன்னதாக, சி.வி. சண்முகத்தின் ஆதரவாளரான சுரேஷ் பாபு, கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்ட பசுபதி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பசுபதி, கட்சியின் வளர்ச்சி மற்றும் எடப்பாடி பழனிசாமியின் நன்மதிப்பைக் சீர்குலைக்கவே இத்தகைய அவதூறுகள் பரப்பப்படுவதாகச் சாடினார்.
கட்சிக்கும் பொதுச்செயலாளருக்கும் எதிராகச் செயல்பட்ட காரணத்தாலேயே சி.வி. சண்முகம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, தமக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டதாக பசுபதி தெரிவித்தார். அதன்பின்னர் மாவட்டத்தில் அதிமுக புதிய எழுச்சியுடன் செயல்பட்டு வருவதாகவும், தினமும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கட்சியில் இணைந்து வருவதாகவும் கூறினார். மேலும், சென்னையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் விழுப்புரத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்று மாநில அளவில் முதலிடம் பிடித்த சாதனையைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதாகக் குற்றம்சாட்டினார்.
முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் மீதும், அவரது ஆதரவாளர் சுரேஷ் பாபு மீதும் கடுமையான புகார்களை அடுக்கிய பசுபதி, சுரேஷ் பாபு கடந்த காலங்களில் திமுக தலைவர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு பணத்தைப் பெற்று கட்சிக்கு எதிராகச் செயல்பட்டவர் என்று குறிப்பிட்டார். 2001 தேர்தலில் பொன்முடயிடம் பணம் பெற்று கட்சி வேட்பாளருக்கு எதிராகச் செயல்பட்டதும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் சி.வி. சண்முகம் தோல்வியடைந்ததற்கு சுரேஷ் பாபுவே முக்கியக் காரணம் என்றும் அவர் சாடினார். மேலும், சி.வி. சண்முகம் அமைச்சராக இருந்த காலத்தில் அளவுக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாகவும், அவரது குடும்பத்தினர் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் பெருமளவில் முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவித்த அவர், இதுகுறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்காக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைப் புதுச்சேரி ரிசார்ட்டில் தங்க வைத்த விவகாரத்திலும் சி.வி. சண்முகத்தைச் சாடிய பசுபதி, “எம்.எல்.ஏ-க்கள் தங்குவதற்காகப் புதுச்சேரியில் அறைகளை முன்பதிவு செய்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது சி.வி. சண்முகமும் அவரது சகோதரர் சி.வி. ராதாகிருஷ்ணனும்தான்” என்று பகிரங்கமாகத் தெரிவித்தார். இந்தச் சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என்று கூறுவது முற்றிலும் உண்மைக்குப்புறம்பானது என்றும், இதுகுறித்து ஆழ விசாரணை நடத்தினால் அனைத்து உண்மைகளும் வெளிச்சத்திற்கு வரும் என்றும் அவர் தனது பேட்டியில் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…