தமிழக தேர்தல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரச்சாரம் மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தை என மும்முரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் தனது கூட்டணியை பலமாக வைத்துக்கொண்டு திமுக ஆட்சியை மீண்டும் நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வர மறுபக்கம் இபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு அதிமுக ஆட்சியை நிலைநாட்ட பல திட்டங்களை தீட்டி வருகிறார். இவர்களுக்கு நடுவே விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விஜய்க்கு பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இணைய தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றன. ஆனால் இதுவரை கூட்டணி குறித்து அறிவிப்பை விஜய் வெளியிடாமல் உள்ளார். இதனால் 2026 தேர்தலில் விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாகவே உள்ளது.
இந்நிலையில் SIR நடவடிக்கை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தமிழக வெற்றி கழகம் கட்சியின் இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் கூறி இருந்த நிலையில் திமுகவின் பூச்சு முருகன் பனையூருக்கு நேரடியாக சென்று பொதுச் செயலாளர் ஆனந்தை சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். வருகின்ற நவம்பர் இரண்டாம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ள நிலையில் தமிழக வெற்றிக்கழகம் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமா என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
பெங்களூருவில் இருந்து துமாகுருக்கு காரில் சென்றபோது, பெண்ணை அவருடன் வந்த நபர் கத்தியால் குத்திய நிலையில், காரை வெடிக்கச் செய்து…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. ஆட்சி…
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் அடையாள அட்டைகளில் இனிமேல் சாதிப் பெயர் இடம் பெறாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடியாக…
நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி, திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்து வரும் திரைப்படம் 'மா இன்டி பங்காரம்'. சமந்தாவின்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு குரங்கின் வீடியோ, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு எப்படி முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற…
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாமியார், பெங்களூருவில் வசிக்கும் தனது மருமகளுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற மற்றும் அவருக்குப் பிடித்தமான…