Categories: CINEMA

நடக்கும் போது சொல்லாம 10 வருஷம் கழிச்சு சொன்னா..? Me too குறித்து மனம் திறந்து பேசிய பார்த்திபனின் முன்னாள் மனைவி சீதா..

80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சீதா. இவர் ஆண் பாவம், குரு சிஷ்யன், ராஜா நடை என பல படங்களில் நடித்து மிகப் பிரபலமானார். இதை தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதை தொடர்ந்து அவர் நடிகர் பார்த்திபனுடன் இணைந்து பாரதி கண்ணம்மா, வருவாய் என, புதிய பாதை போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்தார். இதன் பிறகு நடிகர் பார்த்திபனுக்கும் சீதாவுக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. அத்துடன் ஆண் குழந்தை ஒன்றையும் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

11 வருடம் இணைந்து வாழ்ந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக 2001ல் விவாகரத்து பெற்றனர். இதை தொடர்ந்து நடிகை சீதா தனது 43 வது வயதில் டிவி நடிகர் சதீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவரையும் சில மாதங்களிலேயே விவாகரத்து செய்து விட்டார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் Me too குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ‘இன்று Me Tooவில் புகார் அளிக்கும் ஒவ்வொரு பெண்களும் நினைத்திருந்தால் அப்படி அவர்களது வாழ்க்கையில் பிரச்சினை வராமல் தடுத்திருக்க முடியும். ஆனால் எங்கு இதை பற்றி வெளியே சொன்னால் தனக்கு தேவையான வேலையோ, வாய்ப்போ போய்விடும் எனும் அச்சத்தில்தான் அதை பற்றி வெளியே சொல்வதில்லை. இது வயது கோளாறால் ஏற்படக்கூடிய சாதாரண விஷயமே.

ஆனால் அந்த நேரத்தில் அதனை விட்டுவிட்டு ஒரு 10 ஆண்டுகள் கழித்து சம்பந்தப்பட்ட நபர் மீது புகார் அளிப்பது மிகப்பெரிய தவறு என்றும்,  ஒரு வேளை அந்த 10 வருட காலத்தில் சம்பந்தப்பட்டவர் பக்குவப்பட்டிருக்கலாம் அல்லது 10 ஆண்டுகளில் அவர்கள் அந்த இடத்திற்கு வருவதற்கு எவ்வளவோ சிரமங்களை சந்தித்திருக்கலாம் . எனவே அவர்கள் மீது குறை கூறுவது தவறான விஷயம் என்று கூறியுள்ளார்.

Begam

Recent Posts

விவாகரத்தான நபரை திருமணம் செய்யப்போகிறார் நடிகை சுனைனா? யார் அந்த துபாய் மாப்பிள்ளை?

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சுனைனா. இவர் நகுலுக்கு ஜோடியாக காதலில்…

35 நிமிடங்கள் ago

ராதிகாவின் அம்மாவை அடிக்க கை ஓங்கிய கோபி.. பரபரப்பான கதைகளத்துடன் நகரும் பாக்கியலட்சுமி சீரியல்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி ஆண்டுகள் கடந்தும் சேனலின் இரண்டாவது…

3 மணி நேரங்கள் ago

கிழக்கே போகும் ரயில் படத்தில் முதலில் நடிக்க விருந்தது இந்த மெகா ஸ்டாரா..? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!

தமிழ் திரைப்படத் துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் பாரதிராஜா. கடந்த 1977-ஆம் ஆண்டு ரிலீசான 16 வயதினிலே…

4 மணி நேரங்கள் ago

புதிய சீரியலை களமிறக்கும் சன் டிவி.. மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பிரபல ஹீரோயின்.. ப்ரோமோவே வேற லெவலில் இருக்கே..!!

சன் டிவியும், விஜய் டிவியும் போட்டுக் கொண்டு புது புது நிகழ்ச்சிகளை ஆரம்பித்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித்…

4 மணி நேரங்கள் ago

தமிழ் சினிமா மட்டுமில்ல.. இந்திய சினிமாவே தயாரா இருக்கணுமாம்.. தங்கலான் படம் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் வெளியிட்ட மாஸ் அப்டேட்..!!

தமிழ் சினிமாவில் தனது மாறுபட்ட கெட் அப் மற்றும் நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்டவர் விக்ரம் இப்போது விக்ரம் பா.ரஞ்சித்…

7 மணி நேரங்கள் ago

நான் தூக்கி வளர்த்த குழந்தை.. இன்னைக்கு வளர்ந்து மிகப்பெரிய விஷயத்தை செய்ய போறாரு.. வீடியோ வெளியிட்டு லாரன்ஸ் உருக்கம்..!!

சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராகவா லாரன்ஸ். நடிப்பு மட்டுமில்லாமல் பிறருக்கு உதவி செய்யும் குணத்தால் மக்கள் மனதில்…

7 மணி நேரங்கள் ago