Categories: சினிமா

நாட்டாமை படத்துல பார்த்திபனா?… சக்கர பொங்கலுக்கு வடகறியா?- நல்ல வேள தப்பிச்சுது!

Spread the love

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராகவும் நடிகராகவும் 30 ஆண்டுகளுக்கு மேலாக வரும் வருகிறார். அவர் தான் இயக்கி நடித்த புதிய பாதை என்ற வெற்றிப் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் நுழைந்தார். அதற்கு முன்னர் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

புதிய பாதை படத்தில் அப்போது முன்னணி நடிகையாக இருந்த சீதாவைக் கதாநாயகியாக நடிக்க வைத்தார். அந்த படம் அபூர்வ சகோதரர்கள் என்ற பெரிய படத்தோடு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்துக்காக தேசிய விருதும் பெற்றார். அதன் பின்னர் கவனிக்கப்படும் நடிகராகவும் இயக்குனராகவும் அறியப்பட்டார்.

அந்த படத்தின் உருவாக்கத்தின் போது இருவரும் காதலில் விழுந்தனர். அதன் பின்னர் பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு நடிப்பைக் குறைத்துக் கொண்டார் சீதா. ஆனால் பார்த்திபன் நடிகராகவும் இயக்குனராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

அவரின் இந்த பயணத்தில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளார் பார்த்திப்ன. நடிகராக சம்பாதிக்கும் பணத்தை இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் முதலீடு செய்து வித்தியாசமான படங்களை இயக்கி கையை சுட்டுக் கொள்கிறார். ஆனாலும் தொடர்ந்து சினிமாவில் அவர் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறார்.

இந்நிலையில் பார்த்திபன் சில மாதங்களுக்கு முன்னர் அளித்த ஒரு நேர்காணலில் பேசும் போது ‘நாட்டாமை’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு முதலில் தனக்குதான் வந்தது எனக் கூறியுள்ளார். அதில் “நாட்டாமை பட வாய்ப்பு எனக்குதான் முதலில் வந்தது. நான்தான் அந்த மாதிரி படங்கள் எல்லாம் நான் நடிப்பதில்லை என சொல்லி வேண்டாம் என்று விட்டேன்” எனக் கூறியுள்ளார்.

நாட்டாமை படத்தில் பார்த்திபன் நடித்திருந்தாலும் அது இவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருக்குமா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் பார்த்திபனின்  சிறப்பே அவரின் நக்கல், நய்யாண்டிதான். அதுதான் இன்று வரை அவரது இமேஜாக உள்ளது. ஆனால் நாட்டாமை படத்தில் இது இரண்டுக்குமே வேலை இல்லை. அதனால் அவர் அதில் நடித்திருந்தால் சக்கரபொங்கல் & வடகறி காம்பினேஷனாகதான் அமைந்திருக்கும்.

 

vinoth

Recent Posts

தங்கம் ஒரு சவரன் ரூ.2 லட்சமா?.. சர்வதேச சந்தையில் நடக்கும் ‘கோல்டு பிளான்’.. கோல்ட் குரு வெளியிட்ட பகீர் தகவல்…!

தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…

2 minutes ago

“தங்கம் விலையில் திடீர் திருப்பம்”… சந்தையில் ஏற்படப்போகும் மிகப்பெரிய மாற்றம்… நிபுணர்கள் வெளியிட்ட பகீர் தகவல்…!

உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…

9 minutes ago

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்… விஜய்க்கு எதிராக நடிகை சொர்ணமால்யா வெளியிட்ட அதிரடி வீடியோ… அதுக்கு அவர் சொன்ன காரணம் தான் ஹைலைட்…!

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரைத்துறையினரின் அரசியல் வருகையும் கருத்துகளும் விவாதப்…

14 minutes ago

“ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி.. மாணவர்களுக்கு மகிழ்ச்சி”… கோடை விடுமுறை அறிவிப்பில் செக் வாய்த்த பள்ளிக்கல்வித்துறை…!

தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 17) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.…

18 minutes ago

“மசோதா எரிப்பு… கறுப்புக்கொடி போராட்டம்”… முதல்வர் ஸ்டாலினின் அதிரடி ஆக்‌ஷன்… அதிர வைக்கும் போஸ்ட்…!

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான…

31 minutes ago

திமுகவில் வெடித்த குடும்ப சண்டை… உதயநிதிக்கு கயல்விழி கொடுத்த மரண அடி… தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!

திமுக உட்கட்சி அரசியலில் நீண்டகாலமாக நிலவி வரும் புகைச்சல், தற்போது மு.க.அழகிரியின் மகள் கயல்விழியின் காட்டமான விமர்சனங்களால் மீண்டும் விஸ்வரூபம்…

37 minutes ago