Categories: சினிமா

மகாராஜா படம் மாதிரி ஒரு கதையை 24 வருஷத்துக்கு முன்னாடி சூப்பர் ஸ்டாருக்கு சொன்னேன்.. குண்டை தூக்கி போட்ட பார்த்திபன்..!!

Spread the love

இயக்குனராகவும் நடிகராகவும் தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் பார்த்திபன். இவர் இயக்குனர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார். முதன் முதலாக கடந்த 1989-ஆம் ஆண்டு ரிலீசான புதிய பாதை திரைப்படத்தை இயக்கி அதில் பார்த்திபனே நடித்தார். இந்த படம் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது. அதன் பிறகு பொண்டாட்டி தேவை, சுகமான சுமைகள், சரிகமபதநி, புள்ளை குட்டிக்காரன், ஹவுஸ் ஃபுல், இவன், பச்சைக் குதிரை, ஒத்த செருப்பு உள்ளிட்ட படங்களை இயக்கி நடித்தார்.

பார்த்திபனின் ஹவுஸ்புல் திரைப்படம் சிறந்த மாநில மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது. கிறுக்கல்கள் என்ற கவிதை தொகுப்பையும் பார்த்திபன் எழுதியுள்ளார். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் தன்னை நிரூபித்து காட்டியுள்ளார். பாரதி கண்ணம்மா படத்தில் நடித்ததற்காக பார்த்திபனுக்கு சிறந்த தமிழ் நடிகருக்கான தமிழக அரசின் விருது வழங்கப்பட்டது.

சமீபத்தில் பார்த்திபன் அளித்த பேட்டியில் கூறியதாவது, மகாராஜா படத்தில் இடைவெளி வரைக்கும் கதை எதை நோக்கி போகுதுன்னு சொல்லவே இல்ல. இதே மாதிரி ஒரு கதையை 24 வருஷத்துக்கு முன்னாடி ரஜினி சார் கிட்ட நான் சொன்னேன். நீங்க உங்க கண்ணை அசைக்கிறதுல இருந்து தெரியும் நீங்க அவனை பழிவாங்க போறீங்க அப்படின்னு. ஆனா எதுக்கு பழிவாங்க போறீங்க அப்படிங்கறது நான் சொல்லல. ரஜினி சார் இன்டர்வெல் வரைக்கும் சொல்லாம இருந்தா ஆடியன்ஸ்க்கு எப்படி தெரியும் என ரஜினி சார் கேட்டாரு.

தேவையில்லை சார் நீங்க பழிவாங்க போறீங்க அப்படிங்கறது நம்ம சுவாரசியமா சொன்னா போதும் அப்படின்னு சொன்னேன். ஆனா ஒரு சில காரணத்தால அந்த கதையை எடுக்க முடியாமல் போயிடுச்சு. ரஜினி சாரை பொருத்த வரைக்கும் அவர் இவ்வளவு உயரத்தில் இருக்கிறதுக்கு அவர் தேர்ந்தெடுக்கிறார் கதைகள் ரொம்ப முக்கியம். ஒரு சில படங்கள் தோல்வி அடைந்து இருக்கலாம். அதுக்கு ரஜினி சார் இயக்குனர்கள் மேல வைக்கிற நம்பிக்கைதான் காரணம் என ஓப்பனாக பேசியுள்ளார்.

admin

Recent Posts

தவெகவிலிருந்து விலகும் மனநிலையில் செங்கோட்டையன்…? ரகசியத்தை உடைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்..!!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…

1 மணத்தியாலம் ago

குடிமகனாக மாறிய கெவின் பீட்டர்சன்? மதுக்கடையில் கேமரா முன்னிலையில் செய்த காரியம்… பதறிய ரசிகர்கள்… இறுதியில் காத்திருந்த ‘ட்விஸ்ட்’… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…

1 மணத்தியாலம் ago

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

2 மணத்தியாலங்கள் ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

2 மணத்தியாலங்கள் ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago