முன்னணி இயக்குனரான பார்த்திபன் இயக்கத்தில் டீன்ஸ் திரைப்படம் ரிலீஸ் ஆனது. சிறுவர்கள் தங்கள் வாழ்க்கையில் எடுக்கும் அதிர்ச்சிகரமான முடிவுகளை மையமாகக் கொண்டு மாறுபட்ட கதைக்களத்துடன் படம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் டீன்ஸ் படம் குறித்து பார்த்திபன் கூறியதாவது, என் கையில மெர்குரி மாதிரி இருக்கிற விஷயம் தான் அந்த ஏலியனோட ஒரு பகுதி. முதல்ல டீன்ஸ் 2 படத்தின் கதையை உருவாக்கணும். ஏலியன வச்சுட்டு அவளாக இருந்தால் காதல் கதை.
![]()
அவனாக இருந்தால் ஆக்சன் கதை ஏதாவது பண்ணலாம்னு நினைச்சு இருக்கேன். டீன்ஸ் படத்தோட வெற்றிக்கு பிறகு டீன்ஸ் 2 படத்தோட கதை மாறலாம். ஒரு புரொடியூசர் யாராவது வந்தா பெரிய பட்ஜெட்டில் படம் பண்ணலாம். அப்படி இல்லன்னா நானே ஒரு பட்ஜெட்டில் படம் பண்ணலாம். தமிழ் சினிமாவுக்கு ஒரு புதுவிதமான எக்ஸ்பீரியன்ஸ். ஏன் இது அந்த மாதிரி பார்க்க மாட்டீங்க? உங்களுக்கு தெரிந்ததாவே இருக்கணும்னு ஏன் நினைக்கிறீங்க? இந்த கதை ஏன் இப்படி இருக்க கூடாது. பாக்யராஜ் சார் படம் பார்த்துட்டு இந்த கோல்டன் டிஸ்க் நான் படிச்சதே இல்லன்னு சொன்னாரு.

நான் ஏன் படிக்கணும் சார். தேவை இல்லை. 13 பசங்களும் ஒரு ஒருத்தரா மிஸ் ஆகுறாங்க. ஒரு ஸ்பேஸ் ஷிப் எடுத்துட்டு போகுது. கடைசில யாராவது ஒருத்தர் தியாகம் பண்ணா நீங்க எல்லாரும் தப்பிக்கலாம் அப்படின்னு சொல்றாங்க. அப்பதான் ஹியூமானிட்டின்னு ஒரு விஷயம் வருது. இவ்வளவு நேரமா காமிச்ச ஒரு பையன். அந்த பையன் ஒரு ஆதரவற்ற பையன். அவனுக்கு யாருமே கிடையாது. இவங்க உயிருக்கு பிரச்சனை இருக்கிற நேரத்துல ஒரு ஆட்டுக்குட்டியோட உயிரை காப்பாத்துறாங்க. இதை பத்தி யாருமே மென்ஷன் பண்ண மாட்டாங்க.

அது ரொம்ப வருத்தமா இருக்கு. ஒரு ஆட்டுக்குட்டியை காப்பாற்றி அதை கடைசி வரைக்கும் தூக்கிட்டு போறாங்க. தன் மேல ரொம்ப அக்கறையா இருக்க பொண்ணு கிட்ட அதை கொடுத்துட்டு அவன் போறான். இந்த சமூகத்தால யாரு நிராகரிக்கப்படுறாங்களோ அவங்கள உயர் நிலையில் அடைய வைக்கணும். அப்படின்னா தான் இந்த பூமி சமமாகும். அதுதான் என்னோட ஐடியா. இத ஜாதி, மதம் அப்படிங்கிற பேர்ல இயக்குற நிறைய டைரக்ட் இருந்தாலும் இதை அப்படி சொல்லாமல் நான் ஒரு விஷயத்தை செய்றேன். இத தான் ரொம்ப அப்ரிஷியேட் பண்ணனும்னு நான் எதிர்பார்க்கிறேன் என கூறியுள்ளார்.

