#image_title
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராகவும் நடிகராகவும் 30 ஆண்டுகளுக்கு மேலாக வரும் வருகிறார். அவர் தான் இயக்கி நடித்த புதிய பாதை என்ற வெற்றிப் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் நுழைந்தார். அதற்கு முன்னர் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
புதிய பாதை படத்தில் அப்போது முன்னணி நடிகையாக இருந்த சீதாவைக் கதாநாயகியாக நடிக்க வைத்தார். அந்த படம் அபூர்வ சகோதரர்கள் என்ற பெரிய படத்தோடு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்துக்காக தேசிய விருதும் பெற்றார். அதன் பின்னர் கவனிக்கப்படும் நடிகராகவும் இயக்குனராகவும் அறியப்பட்டார்.
அந்த படத்தின் உருவாக்கத்தின் போது இருவரும் காதலில் விழுந்தனர். அதன் பின்னர் பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு நடிப்பைக் குறைத்துக் கொண்டார் சீதா. ஆனால் பார்த்திபன் நடிகராகவும் இயக்குனராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
#image_title
அவரின் இந்த பயணத்தில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளார் பார்த்திப்ன. நடிகராக சம்பாதிக்கும் பணத்தை இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் முதலீடு செய்து வித்தியாசமான படங்களை இயக்கி கையை சுட்டுக் கொள்கிறார். இப்போது அவர் சிறுவர்களை வைத்து டீன்ஸ் என்ற படத்தை இயக்கி அதை இந்தியன் 2 ரிலீஸ் ஆகும் நாளில் ரிலீஸ் செய்யவுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் அவர் பகிர்ந்துள்ள தகவல் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அதில் “நாட்டாமை படம் முதலில் எனக்குதான் வந்தது. கே எஸ் ரவிக்குமார் சார் வந்து கதை சொன்னார். எனக்குக் கிராமம் பற்றிய புரிதலே இல்லை. நான் எப்போதுமே ஒரு வித்தியாசமான நடிகனாக இருக்கவேண்டும் என ஆசைப்படுவேன்.
அந்த கதையைக் கேட்டு விட்டு என்ன சார் எப்ப பார்த்தாலும் பஞ்சாயத்து, சொம்புன்னுகிட்டு என வேண்டாம் என சொல்லிவிட்டேன். என்னால் அந்த கதையை இமேஜின் பண்ணவே முடியல. ஒருத்தர் உடம்பெல்லாம் சந்தனம் பூசிகிட்டு வெற்றுடம்போடு இருப்பது எனக்கு ஒருமாதிரி நகைச்சுவையாக இருந்தது. ஆனால் சரத்குமார் சார் அதில் நடித்தது அவருக்கு சரியாக பொருந்தியது” எனக் கூறியுள்ளார்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…