இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகர்கள் அதர்வா ரவி மோகன் குரு சோமசுந்தரம் சேத்தன் பசில் ஜோசப் நடிகை ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். வருகிற 10ம் தேதி பராசக்தி படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளது.
இதற்கிடையே இன்று மாலை பராசக்தி டிரெய்லர் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கவனத்தை பெற்று வருகிறது. இது 1960 – 65 காலகட்டத்தில் நடக்கும் மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் என்பவரின் வாழ்க்கை கதை என்று கூறப்படுகிறது.
பராசக்தி படத்தின் கதையில் சிவகார்த்திகேயன், அதர்வா இருவரும் சகோதரர்கள். இதில் சிவகார்த்திகேயன் இந்தி பேசுகிற ஸ்ரீலீலாவை காதல் செய்கிறார். எனக்கும் இந்தி கத்துக்கொடு என்று கேட்கிறார். ஆனால் அதர்வா இந்தியை எதிர்க்கும் ஒரு கல்லூரி மாணவராக போராட்ட களத்தில் ஆவேசமாக கலந்துக்கொள்கிறார். பல போராட்டங்கள் நடக்கின்றன. இந்த சூழ்நிலையில் அதர்வா வில்லனால் கொல்லப்படுவதால் அவரது இடத்தில் சிவகார்த்திகேயன் மீண்டும் வந்து இந்தியை எதிர்ப்பது போன்ற கதைக்களத்தில் இந்த படம் உருவாகி இருப்பதை டிரெய்லர் காட்சிகள் வெளிப்படுத்துகிறது. இந்த படத்தில் மில்லியனர் வில்லனாக நடிகர் ரவிமோகன் நடித்திருக்கிறார். இந்த படம் மக்கள் மத்தியில் பேசப்படுகிற ஒரு படமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…