தமிழக அரசியலில் ஒரு அதிரடித் திருப்பமாக, ஓ. பன்னீர்செல்வத்தின் (OPS) “அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின்” அரசியல் ஆலோசகராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன், அந்த அமைப்பிலிருந்து விலகி “எம்ஜிஆர் அதிமுக” என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓபிஎஸ் அணியின் மிக முக்கியமான தூணாகவும், மூத்த வழிகாட்டியாகவும் கருதப்பட்ட பண்ருட்டி ராமச்சந்திரனின் இந்த முடிவு, அந்த அணியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திடீர் முடிவிற்கான காரணம் மற்றும் புதிய கட்சியின் கொள்கைகள் குறித்து விளக்குவதற்காக, நாளை மறுநாள் (பிப். 19) சென்னை நுங்கம்பாக்கத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், ஓபிஎஸ் அணியின் மற்ற முக்கிய நிர்வாகிகளான மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் ஏற்கனவே விலகிவிட்ட நிலையில், பண்ருட்டி ராமச்சந்திரனின் இந்த நகர்வு தமிழக அரசியலில் ஒரு முக்கிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. மேலும், அவர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) கூட்டணி அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…