Categories: சினிமா

எனக்கு அம்மா ஆக தகுதி இல்லையா..? இப்ப சத்தமா கத்தி சொல்றேன்.. I am Pregnant கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட பிரபலம்..!

Spread the love

தன் கர்ப்பமாக இருக்கும் செய்தியை பனிமலர் பன்னீர்செல்வம் வீடியோவாக இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார்.

சினிமா நடிகைகளுக்கு இணையாக தற்போது பல சீரியல் நடிகைகள் செய்தி வாசிப்பாளர்களுக்கும் ரசிகர்கள் பட்டாலும் உருவாகின்றது. ப்ரியா பவானி சங்கர், அனிதா போன்ற பல செய்தி வாசிப்பாளர்களை ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள். அந்த வகையில் நியூஸ் 7 சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் தான் பனிமலர் பன்னீர்செல்வம். இவர் கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்தவர்.

ஃபேஷன் டிசைன் படிப்பதற்காக சென்னை வந்த இவர் நியூஸ் 7 தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்தவுடன் அதனை பயன்படுத்திக் கொண்டு வேலை பார்த்து வந்தார். பின்னர் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கின்றார். அதிலும் இவர் தொகுத்து வழங்கிய வியப்பூட்டும் விஞ்ஞானம் நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இது ஒரு பக்கம் இருக்க சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவ்வாக இருந்து வந்த இவர் நடிகை அளவுக்கு பிரபலமானார். கடை திறப்பு விழாவில் எல்லாம் பங்கேற்றார். இவர் தன்னுடைய நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி பல வருடங்கள் ஆன நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லை. இது குறித்து பலரும் இவரை கேட்டிருக்கிறார்கள். இந்த கேள்விகள் பனிமலரை அதிகளவு பாதித்தது.

தற்போது தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை வீடியோ மூலமாக பகிர்ந்து இருக்கின்றார். அதில் தவமாய் தவமிருந்து நான் அம்மா ஆகப் போகிறேன். சீக்கிரம் ரெண்டு பாப்பா பெத்துக்கணும்னு ஆரம்பிச்சு பாப்பா பெத்துக்கணும், பாப்பா எப்ப தான் பெத்துக்கிறது, பாப்பாவே பொறக்காதா? நமக்கு அம்மா அப்பா ஆகுற தகுதி இல்லையா? மத்த மாசமா இருக்கிற பெண்களை குட்டி குழந்தைகளை பார்த்தாலே அழுகை வந்திடும். பாப்பாவே வேண்டாம், நமக்கு பாப்பாவை பிறக்காது என்று வந்து நின்னுடுச்சு மனசு.

என்ன நானே சமாதானப்படுத்திக்கத்தான் ராக்கி, மோனா அவுங்ககிட்ட அம்மா அம்மானு சொல்லும்போதும், அவுங்க என்ன தேடும்போதும், கொஞ்சும்போது ஒரு அற்ப சந்தோசம் என் புள்ளைகனு, நானும் அற்ப அம்மாதான்னு. அவ்ளோதான் இப்டியே உள்ளதவச்சு சந்தோசப்பட்டுகணும்னு எல்லாதுல இருந்தும் விலகி நாம உண்டு நம்ம வேல உண்டுன்னு இருக்கும்போது எல்லாமே தலைகீழா மாறுச்சு, நினைக்காத விசயங்கள் எல்லாம் நடந்துச்சு. குழந்தைக்கு முயற்சிக்கும்போதும் 1% நம்பிக்கைகூட இல்ல, எனக்கு குழந்தை பிறக்கும்னு, இப்பவரைக்கும் முழுமைய நம்பமுடியல.

இது கனவா, நிஜமா நடக்குதானு. Scan-ல பாப்பாவோட இதயத்துடிப்ப கேக்கும்போதெல்லாம் கதறி அழுவேன், அதுக்காகவே ரொம்ப நேரம் காட்டுவாங்க. அப்ப மட்டும் உண்மைதான்போலனு தோணும். ஆரம்பத்துல அப்ப பாக்குறவுங்களுக்கு தெரியும் என் வாழ்க்கை எப்பயும் சுலபமானதா இல்ல, அது அடிச்ச அடிலதான் நான் இந்த நிலமைல இருக்கேன், இப்பவும் எவ்ளவோ பாரங்களோடதான் இந்த பயணத்தை தொடர்ந்துட்டிருக்கேன். சத்தமா கத்தி சொல்றேன் “ I’M PREGNANT“. எனக்குள்ள ஒரு பாப்பா இருக்கு. உங்க அனைவரது வாழ்த்துகளுக்கும் நன்றி என்று பதிவிட்டு இருக்கின்றார்.

Mahalakshmi

Recent Posts

அமெரிக்க கப்பல்களை தாக்க டால்பின்களை பயன்படுத்தும் ஈரான்..? புது டெக்னாலஜியால் மிரண்டு போன டிரம்ப்… பெரும் பரபரப்பு..!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…

7 மணத்தியாலங்கள் ago

3 வயது சிறுவனை.. 30 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற தெருநாய்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரல்…!

கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…

7 மணத்தியாலங்கள் ago

உலகையே அதிர வைத்த வினோத விழிப்புணர்வு! வெண்கல மணிக்குள்ளே நிர்வாணமாகத் தொங்கிய கலைஞர்..வைரலாகும் ஷாக் வீடியோ..!

வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…

8 மணத்தியாலங்கள் ago

ஒரே நொடி.. பதற வைக்கும் விபத்து..! மின்னல் வேகத்தில் பிரேக் போட்ட கார் டிரைவர் – ஜாபுவாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…

8 மணத்தியாலங்கள் ago

விஜய்யின் முதல்வர் பதவியேற்பு விழா ரத்து..? கடைசி நேரத்தில் அதிர்ச்சி.. நாளை நடக்கப்போவது என்ன..??

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…

8 மணத்தியாலங்கள் ago

“தலைவருக்காக என் பதவியை ராஜினாமா செய்யத் தயார்” முதல்வரிடம் தமிமுன் அன்சாரி உருக்கம்… ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை..!!

சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…

8 மணத்தியாலங்கள் ago