#image_title
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வரும் ஸ்டாலின் தனது சிறு வயது புகைப்படத்தை பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
சின்னத்திரையில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஸ்டாலின். சின்னத்திரை மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் பல திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கின்றார். பல படங்களில் அண்ணன், தம்பி உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் விஜய் டிவியில் பல சீரியல்களில் நடித்திருக்கின்றார்.
நடிகர் ஸ்டாலினின் சொந்த ஊர் தேனி. ஆனால் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இயக்குனர் பாரதிராஜாவின் அண்ணன் பையனான இவர் முதன்முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலமாக தான் அறிமுகமானார். இந்த சீரியலில் ரிஷி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதையடுத்து பாரதிராஜா இயக்கத்தில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெற்கத்தி பொண்ணு என்ற சீரியலில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் நடித்தார். இந்த சீரியலில் அண்ணன் தம்பிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த சீரியல் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.
தற்போது அந்த சீரியலின் இரண்டாம் பாகம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியலில் 3 மகன்களுக்கு அப்பாவாக நடித்த அசத்தி வருகின்றார். இந்த சீரியலில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் மக்களை கவர்ந்திருக்கின்றார். சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஸ்டாலின் அவபோதுதான் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது தனது குடும்பத்துடன் சிறுவயது புகைப்படம் ஒன்றை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…
கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…