Categories: சினிமா

அச்சச்சோ.. அப்படியா…? திடீரென முடிவுக்கு வரும் பிரபல ‘சன் டிவி’ சீரியல்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…

Spread the love

சின்னத்திரை சீரியல்கள் குடும்ப பெண்கள் மத்தியில் ஒரு நீங்காத இடத்தை பிடித்துள்ளது. ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். மேலும், சீரியல் என்றாலே முதலில் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது சன் தொலைக்காட்சி தான். அந்த வகையில் சன் தொலைக்காட்சிகளும் புதுபுது சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

     

அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இந்த தொடர் 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது.

இது முழுக்க முழுக்க குடும்ப, காதல், நகைச்சுவை நாடகம் ஆகும். இந்த தொடர் மதியம் தான் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் பாப்ரிகோஷ், நரேஷ் ஈஸ்வர், ஆர்த்தி சுபாஷ், குகன் சண்முகம் உட்பட பலர் நடிக்கிறார்கள்.

 

அண்ணன்- தம்பிகள் இடையேயான உறவு குறித்த தொடர். அதுமட்டும் இல்லாமல் பாண்டவர் இல்லத்தை ஐந்து மருமகள்களும் எப்படி பொறுப்புடன் வழிநடத்துகிறார்கள்? பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்பது தான் சீரியலின் கதை.

இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. பல திருப்பங்களுடன் ஒளிபரப்பப்பட்ட இந்த சீரியல் தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

சமீப காலமாக இந்த தொடர் குறைந்த அளவு டிஆர்பி யை பெற்று வந்தது. இதனால் பாண்டவர் இல்லம் தொடர் விரைவில் முடிவடையும் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் பாண்டவர் இல்லம் தொடரின் இறுதி நாள் படப்பிடிப்பு நேற்று நடைபெற்றது. இதில் பாண்டவர் இல்லம் சீரியலில் நடித்த நடிகர் நடிகைகள் ஒன்றிணைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.  1216 எபிசோடுகள் ஒளிபரப்பாகி நிறைவடைந்த இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Begam

Recent Posts

இதுதான் விஜய் சொன்ன மாற்றமா..? TVK கூட்டணியில் பாஜக, காங்கிரஸ்… திமுக விமர்சனம்..!!

தமிழக அரசியலில் நிலவும் கூட்டணி விவகாரங்கள் குறித்து திமுக எம்.பி. வில்சன் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதிமுக மற்றும் திமுக…

10 minutes ago

தமிழகம் முழுவதும் கலெக்டர்களுக்கு உடனே செய்ய… முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கி உள்ள நிலையில், பொதுமக்களுக்குக் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட…

17 minutes ago

FLASH :விஜய்யின் ஆஸ்தான ஜோதிடருக்கு அரசு பதவி…!!

தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பும் வகையில், முதலமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல்…

24 minutes ago

“என்னை முதல்வராக்க துடித்தார்கள்!”… திருமாவளவன் உடைத்த ரகசிய அரசியல் டீல்… பரபரக்கும் அரசியல் களம்…!!!

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் தொல். திருமாவளவன், தன்னை முதலமைச்சராக்க அதிமுக, திமுக மற்றும் கூட்டணியில் உள்ள சில…

26 minutes ago

Breaking: விஜய்க்கு ஆதரவு கிடையாது… தமிழக அரசியலில் திடீர் திருப்பம்…!!!

'தமிழக வெற்றிக் கழகத்திற்கு' (தவெக) எதிராக அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி (EPS) தரப்பு களம் இறங்கியுள்ளது. சட்டப்பேரவையில் நடைபெறும் நம்பிக்கை…

30 minutes ago

“உன்னுடன் இருக்கும்போது என் அம்மாவைத்தான் நினைக்கிறேன்”… மனைவியிடம் கணவன் சொன்ன பகீர் வாக்குமூலம்… உலகையே உலுக்கிய ‘டிஸ்டர்பிங்’ உண்மை…!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 19 வயதில் கல்லூரி மாணவியாக இருந்தபோது கிம் தனது மகன் பென்னைப் பெற்றெடுத்தார். போதிய முதிர்ச்சியின்மை காரணமாக…

38 minutes ago