சொத்து பரிமாற்றங்களில் கருப்புப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் முத்திரைத்தாள் வாங்குவதற்கான விதிகளில் வருமான வரித்துறை அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இதன்படி, 2 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பிலான முத்திரைத்தாள் வாங்குபவர்கள் தங்களின் பான் (PAN) கார்டு விவரங்களைச் சமர்ப்பிப்பது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் அதிக மதிப்புள்ள சொத்து விற்பனை மற்றும் வாங்குதல் தொடர்பான தகவல்கள் அனைத்தும் நேரடியாக வருமான வரித்துறையின் கண்காணிப்பிற்குள் கொண்டு வரப்படும்.
மேலும், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் முத்திரைத்தாள் வாங்குவோரின் முழு விவரங்களையும் பதிவு செய்ய வேண்டியது ‘ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன்’ நிறுவனத்திற்கு அவசியமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரும் தொகையைச் செலவிட்டு சொத்து வாங்குபவர்களின் வருமான ஆதாரங்களை வரித்துறை எளிதில் சரிபார்க்க முடியும். வெளிப்படையான பணப் பரிமாற்றங்களை ஊக்குவிக்கவும், வரி ஏய்ப்பைத் தடுக்கவும் கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய நடைமுறை, ரியல் எஸ்டேட் துறையில் பெரிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானை…
சர்வதேச அரசியல் மேடையில் அமெரிக்கா மற்றும் கியூபா இடையிலான உறவு மீண்டும் ஒரு இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக, வெனிசுலாவின்…
சிரிப்புக்கும் குதூகலத்திற்கும் பெயர்போன 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி, தற்போது சர்ச்சைகளுக்கும் சென்டிமென்ட் காட்சிகளுக்கும் களமாக மாறியிருப்பது ரசிகர்கள் மத்தியில்…
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கனவே முடங்கியுள்ள நிலையில், தற்போது ஆசியாவின் மற்றொரு முக்கியப் பகுதியான…
தூத்துக்குடி மட்டக்கடை கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மனைவி பிரேமா (58), தனது வீட்டில் வழக்கம்போல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து…
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் போர்க்களமாக மாறியுள்ளது. குறிப்பாக,…