பழனி முருகன் திருக்கோயிலின் மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள, சுமார் ₹100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலம் தனியார் நபர்களுக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரம், தமிழக அரசியலில் தற்பொழுது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த நில மோசடியில் மிகப்பெரிய அளவில் பினாமி பெயரில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகத் திமுக சட்டத் துறை இணைச் செயலாளர் பரந்தாமன் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், வழக்கை சிபிசிஐடி தன் கைகளில் எடுத்து விசாரிக்கத் தொடங்கியுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக இணைச் செயலாளர் பரந்தாமன், பழனி நில மோசடி வழக்கில் அரங்கேறியுள்ள திட்டமிட்ட சதிகளை அடுக்கினார். பழனியில் உள்ள ₹100 கோடி மதிப்பிலான கோயில் நிலத்தை வெறும் ₹2 கோடிக்குத் தனியார் நபர்களுக்குப் பினாமி பெயரில் பணப்பரிமாற்றம் செய்து மோசடி செய்துள்ளனர் என்று குறிப்பிட்ட அவர், இந்த ஆவணத்தைப் பதிவு செய்வதற்காக அதிகாரிகள் மட்டத்தில் மிகத் துல்லியமான சதி அரங்கேறியுள்ளது என்பது அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் மூலம் தெளிவாகத் தெரிகிறது என்றும் குற்றம்சாட்டினார்.
இந்த நிலத்தை எப்படியாவது தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று ஒரு தரப்பு கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய பரந்தாமன், முதலில் பழனி சார்பதிவாளர் பழனிச்சாமி என்பவரும், அவருக்குப் பின் பொறுப்புக்கு வந்த பாலசுந்தரம் என்ற அதிகாரியும் இந்த வில்லங்கமான ஆவணங்களைப் பதிவு செய்ய மறுத்துவிட்டதாகக் கூறினார். இப்படி அதிகாரிகள் அடுத்தடுத்து மறுத்த நிலையில், சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொடைக்கானலில் இருந்து ஜஸ்டின் மணிகண்டன் என்ற சார்பதிவாளர் அவசர அவசரமாகப் பழனிக்குக் கொண்டு வரப்பட்டு, நிலத்தைப் பதிய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே இந்தச் செட்டிங் அரங்கேற்றப்பட்டுள்ளது என்று அவர் அம்பலப்படுத்தினார்.
மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் அமைச்சர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாகக் கூறிய அவர், பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் ‘சட்டப்பூர்வமாக நடைபெற்றது’ என்றும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ‘அறியாமையால் நடந்த சிறு தவறு’ என்றும் மழுப்பலாகக் கூறுவதைச் சுட்டிக்காட்டினார். நீதிமன்றத்திலேயே அரசு தரப்பு வழக்கறிஞர், ‘சார்பதிவாளருக்கு மேல் மட்டத்தில் இருந்து கொடுக்கப்பட்ட கடுமையான அழுத்தம் காரணமாகவே இந்தப் பதிவு நடத்தப்பட்டது’ என்று ஒப்புக்கொண்ட நிலையில், இதில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகளையும், பின்னால் இருந்து இயக்கிய அரசியல் புள்ளிகளையும் சிபிசிஐடி போலீசார் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவோ பகுதியில், உடல்நலம் குன்றிய கணவரை விட்டுவிட்டு, 50 வயது பெண் ஒருவர் தனது சொந்த…
பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…