ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான்களின் கிளை அமைப்பான ‘தெஹ்ரிக்-இ-தலிபான்’ பாகிஸ்தானில் தொடர்ந்து பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருவதற்கும், அதற்கு ஆப்கானிஸ்தான் அரசு ஆதரவளித்து உதவி வருவதற்கும் பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது; இந்தக் குற்றச்சாட்டுகளால் இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட நாட்களாகவே கடுமையான எல்லைப் பதற்றம் நீடித்து வருவது மட்டுமன்றி, இருதரப்பும் மாறி மாறி வான்வழித் தாக்குதல்களிலும் எல்லைத் துப்பாக்கிச் சூடுகளிலும் ஈடுபட்டு வருவதால் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து ஒரு போர்ப் பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறது.
இந்தச் சூழ்நிலையில், ஆப்கானிஸ்தானின் குனார், கோஸ்ட் மற்றும் பாக்டிகா ஆகிய மாகாணங்களில் உள்ள பொதுமக்களின் வீடுகள் மீது பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த அத்துமீறிய தாக்குதலில் 11 குழந்தைகள், ஒரு பெண் மற்றும் ஒரு முதியவர் உட்பட அப்பாவி பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதாகவும், 14 பெண்கள் மற்றும் குழந்தைகள் காயமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தான் அரசு செய்தித் தொடர்பாளர் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இருப்பினும், இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை மந்திரி அத்தாவுல்லா தரார், ஆப்கானிஸ்தானில் உள்ள ‘ஃபித்னா அல்-கவாரிஜ்’ அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளின் மறைவிடங்களை குறிவைத்தே இந்தத் துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இதில் 26 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தரப்பு கூறுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த சீனா முயற்சி மேற்கொண்டு வரும் வேளையில், இந்தத் கொடூர வான்வழித் தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மழைக்கால பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், ஒவ்வொரு…
கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மேற்கு மண்டலத்தில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்த செந்தில் பாலாஜி, 2026 சட்டமன்றத் தேர்தலில்…
தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சிப் பதவிகளை வழங்குவதற்காகப் பணம் பெறப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மதுரை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை…
சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.23 லட்சம் மோசடி செய்த ஓய்வுபெற்ற பெண் அதிகாரி கைது…
இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் மூலம் 'பைனான்ஸ் வித் ஹரிஷ்' என்ற பெயரில் நிதி ஆலோசனைகளை வழங்கி வந்த பிரபல இன்ஃப்ளூயன்ஸர்…
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை மேகங்கள் தீவிரமாக…