சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள நிலையில், அதன் கடுமையான தாக்கத்தை பாகிஸ்தான் தற்போது எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, “தண்ணீரும் ரத்தமும் ஒன்றாகப் பாயாது” என்ற கொள்கையின் அடிப்படையில் இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்தது. பயங்கரவாதிகள் மீதான தனது நிலையை மாற்றிக்கொள்ளாத பாகிஸ்தான், இந்தியாவின் மீது சர்வதேச அரங்குகளில் “நீர் போர்” நடத்துவதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. இருப்பினும், அதன் உண்மைக்குப் புறம்பான வாதங்கள் உலக நாடுகள் மத்தியில் எடுபடாமல் அம்பலப்பட்டு நிற்கின்றன.
தற்போதைய நிலவரப்படி, 2026-27ஆம் ஆண்டுக்கான காரீஃப் பருவத்தில் சிந்து நதிப் படுகையில் நீர்வரத்து 22 சதவீதம் வரை குறையும் என்று அந்நாட்டு அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளே எச்சரித்துள்ளன. குறிப்பாக, பஞ்சாப் மற்றும் சிந்த் ஆகிய முக்கிய மாகாணங்களின் ஒட்டுமொத்த நீர் அமைப்பிலும் இந்த பற்றாக்குறை எதிரொலிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் தொடர்ந்து அதளபாதாளத்திற்குச் செல்வதும், ஜீலம் மற்றும் செனாப் நதிகளில் நீர்வரத்து கடுமையாகக் குறைவதும் பாகிஸ்தான் அதிகாரிகளை கடும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டு இமயமலைப் பகுதியில் உருவான வெள்ளப்பெருக்கு மற்றும் பனிப்பாறைகளின் உருகலால் தற்செயலாகத் தப்பிய அந்த நாடு, இந்த ஆண்டு பெரிய அளவிலான நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.
பாகிஸ்தானின் ஒட்டுமொத்த விவசாய உற்பத்தியில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பகுதி சிந்து நதிப் பாசன அமைப்பையே நம்பியுள்ளது. இத்தகைய சூழலில் ஏற்பட்டுள்ள இந்த மாபெரும் நீர்ப்பற்றாக்குறை, அந்நாட்டின் உணவுப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குவதுடன், விவசாயத் துறையையும் மிகக் கடுமையான சோதனையில் தள்ளியுள்ளது. நதிகளின் நீர்வரத்தில் நிலவும் தொடர் நிச்சயற்ற தன்மையால் கிராமப்புற பொருளாதாரமும், உணவு உற்பத்தியும் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நிலைமை விரைவில் மாறாவிட்டால், அது கடுமையான உள்நாட்டு நெருக்கடிகளுக்கும் வழிவகுத்துவிடும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பாகிஸ்தான் தனது மண்ணில் வேரூன்றியுள்ள பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் பரிசீலிக்க இந்தியா தயாராக உள்ளது. ஆனால், பயங்கரவாதத்தை ஒழிப்பதில் தயக்கம் காட்டிவிட்டு, சர்வதேச சமூகத்தின் அனுதாபத்தைத் தேடும் பாகிஸ்தானின் தந்திரம் தற்போது எடுபடவில்லை. இந்தியாவின் இந்த உறுதியான ராஜதந்திர நடவடிக்கையால், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் எத்தகைய பொருளாதார மற்றும் மனிதவள இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என்பதற்கு இந்த நீர் நெருக்கடியே சாட்சியாக அமைந்துள்ளது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…