பாகிஸ்தானில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. சில நேரங்களில் தண்ணீர் சீக்கிரம் தீர்ந்து விடுவதாகவும் அதனால் கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது. அப்படி காத்திருந்து கிடைக்கும் தண்ணீர் சில நேரங்களில் மண் கலந்து வருவதாகவும் இதனால் உடல்நல பாதிப்பு ஏற்படுவதாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பாகிஸ்தான் முழுவதும் நிலத்தடி நீர் வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. இந்த நீர் சுமார் 154 அடிக்கு கீழ் ஆழ்ந்த துளையிட்டு எடுக்கப்படுகின்றது. இப்படி அதிகரிக்கும் ஆழ்துளை கிணறுகளின் எண்ணிக்கையால் நிலத்தடி நீர்மட்டமும் சரிவை சந்தித்துள்ளது. இந்த வருடம் பாகிஸ்தானில் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லாததால் பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாக்கியுள்ளது. பல இடங்களில் மக்களுக்கு அசுத்தமான தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. சுத்திகரிப்பு நிலையங்களும் சரியாக செயல்படாததால் அசுத்தமான தண்ணீரை டேங்கரில் கொண்டு வந்து பயன்படுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் பாகிஸ்தான் மக்கள் தண்ணீரை மறு பயன்பாடு செய்து வருகிறார்கள். அதன்படி துணி துவைக்கும் தண்ணீரை வீணாக்காமல் அதனை கழிவறைக்கு பயன்படுத்துகிறார்கள். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் வெளியாகி பலரையும் கலங்க வைக்கிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…