Categories: சினிமா

விஷாலுக்கு வாழ்க்கை கொடுத்த தியாகி.. செந்தமிழச்சி சாய் தன்ஷிகா பற்றி பயில்வான் உடைக்கும் உண்மை..!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷால். இயக்குனராக வேண்டுமென்றால் மிகப்பெரிய கனவோடு சினிமாவில் நுழைந்த விஷால் முதலில் நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன்பிறகு எதிர்பாராத விதமாக 2004 ஆம் ஆண்டு வெளியான செல்லமே என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அடி எடுத்து வைத்தார். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தலாம் என்று சிந்தித்த விஷால் தொடர்ந்து தாமிரபரணி, சண்டக்கோழி மற்றும் திமிரு என சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அந்தஸ்தை பிடித்தார்.

நடிகர் விஷாலின் இந்த இருபது ஆண்டு திரை வாழ்க்கையில் சினிமாவில் அவர் பல வெற்றிகளை கண்டாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல காதல் சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அதெல்லாம் ஒரு முடிவுக்கு கொண்டுவரும் விதமாக  சமீபத்தில் தனது காதலில் சாய் தன்ஷிகாவை அறிமுகப்படுத்தி வைத்து தனது திருமண தேதியையும் விஷால் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து விஷால் மற்றும் சாய் தன்ஷிகா தம்பதிக்கு ஆகஸ்ட் 29ஆம் தேதி விஷால் பிறந்தநாள் அன்று திருமணம் நடைபெற உள்ளது. பல வருடங்களாக நண்பர்களாக பழகி வந்த இவர்களுக்குள் கடந்த சில மாதங்களாக காதல் மலர்ந்த நிலையில் அதனை வெளிப்படையாக கூறி திருமணம் செய்ய போவதாகவும் அறிவித்துள்ளனர்.

47 வயதில் திருமணம் செய்து கொள்ள போகும் விஷாலுக்கு ரசிகர்கள் பலரும் தொடர்ந்து வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். இப்படியான நிலையில் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் விஷால் திருமணம் குறித்து சில தகவல்களை வெளிப்படையாக கூறியுள்ளார். அதில், சாய் தன்ஷிகா தஞ்சாவூரை பூர்விகமாக கொண்டவர். தன்ஷிகா என்ற தன் பெயரை சினிமாவுக்கு வந்த பிறகு தான் சாய் தன்ஷிகா என்று மாற்றிக் கொண்டார். இவர் ஒரு நடுத்தர நடிகை தான். இவரை ஈஸியான நிறைய பேர் சம்பளம் கொடுக்காமல் ஏமாத்திடுவாங்க. அப்படி சிலர் செய்ததால் விஷால் கிட்ட சொல்லி பேச வச்சு நிறைய பேர் கிட்ட சம்பளம் வாங்கி இருக்காங்க தன்ஷிகா. அப்படித்தான் இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

விஷால் ஒரு தெலுங்கு நடிகர் என்றாலும் சென்னையில் வந்து தமிழை கற்றுக் கொண்டு தமிழனாக இருக்கின்றார். இருந்தாலும் விஷால் வீட்ல இன்னைக்கும் தெலுங்கு தான் பேசுவாங்க. விஷாலுக்கு என்று ஒரு மனைவி இருந்திருந்தால் அவருடைய உடல்நிலை இவ்வளவு மோசமடைந்து இருக்காது. என்னதான் ஒரு அம்மா இருந்தாலும் பையன் பசிக்குது என்று சொன்னாதான் சாப்பாடு போடுவாங்க. ஆனா வீட்ல மனைவி இருந்தா வெளியில செல்லும்போது வயிறு நிரப்பிதான் அனுப்பி வைப்பா அதுபோலவே திரும்ப வரும்போதும் பசிக்குதா என்று கேட்டு வயிறு நிறைய சாப்பாடு போடவா.

இன்னைக்கு ஷாய் தன்ஷிகா செய்துள்ளது பெரிய தியாகம் தான். அவரை தியாகி என்று தான் சொல்ல வேண்டும். விஷால் பல காதல் சர்ச்சைகளில் சிக்கியது மட்டுமல்லாமல் நிச்சயதார்த்தம் வரை ஒரு பெண்ணுடன் சென்றுள்ளார். இதையெல்லாம் தெரிந்து கொண்டு தான் சாய்தன்சிகா விஷாலை திருமணம் செய்து கொள்ள உள்ளார். ஒரு தெலுங்கனை திருமணம் செய்து கொள்ளும் செந்தமிழச்சி தான் சாய் தன்சிகா என்று பயில்வான் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

அடபாவேமே..! என்ன நடக்கிறது?… பட்டப்பகலில் சாலையில் சுருண்டு விழுந்த வாலிபர்… பதறவைக்கும் CCTV காட்சிகள்… அதிர்ச்சிப் பின்னணி…!!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில், கடுமையான போதைப்பொருள் பயன்பாட்டிற்கு ஆளான நபர் ஒருவர் தன் நிலை மறந்து சாலையில் நிலைதடுமாறித்…

1 மணத்தியாலம் ago

ஏற்கனவே திருமணம் ஆகிட்டா?.. ஹோட்டல் ரூமில் பிணமான புதுப்பெண்… 3 மாசத்துல முற்றுப்பெற்ற வாழ்க்கை… வங்கி மேலாளர் செய்த வெறிச்செயல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியிலுள்ள ஒரு தங்கும் விடுதி அறையில், திருமணமான மூன்றே மாதங்களில் முஸ்கான் சிமோலியா என்ற…

2 மணத்தியாலங்கள் ago

“போஸ்ட் மார்ட்டம் செய்தால் தீக்குளிப்பேன்…”ஆபாச வீடியோ காட்டி சித்ரவதை… 14 வயது மகனுடன் சேர்த்து நாடகமாடிய தவெக பெண் நிர்வாகி… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, குடிபோதையில் பாலியல் வீடியோக்களைக் காட்டித் தொடர்ந்து சித்ரவதை செய்து வந்த கணவனைக் கொடூரமான முறையில்…

2 மணத்தியாலங்கள் ago

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது…? ரூ.100 கோடி லஞ்சப் புகார் விவகாரம்… உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி மற்றும் அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட லஞ்ச ஒழிப்பு வழக்கில், முன்னாள்…

2 மணத்தியாலங்கள் ago

மூத்த தலைவர்களுடன் அதிகரித்த இடைவெளி…! உதயநிதியின் ‘அறிக்கை அரசியல்’ உத்தியால் திமுகவில் புகையும் உள்கட்சி மோதல்…! குழப்பத்தில் டோஹ்ன்டர்கள்…!

திமுக இளைஞரணிச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், கட்சியின் மூத்த தலைவர்களுடன் போதிய தொடர்பில்லாமல் விலகியிருப்பது கட்சித் தலைவர்…

2 மணத்தியாலங்கள் ago