சிம்ரன் சசிகுமார் உடன் இணைந்து டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு சிம்ரன் திரையில் காமெடி கலந்த சீரியஸான டிராமா திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படியான நிலையில் சிம்ரன் சமீபத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது, நான் ஒரு படம் பார்த்தேன், அந்த படத்தில் நடித்திருந்த நடிகையின் கதாபாத்திரம் எனக்கு பிடித்ததால் அவருக்கு மெசேஜ் செய்து எனக்கு நீங்கள் நடித்த கதாபாத்திரம் சர்ப்ரைஸாக இருந்தது அந்த கதாபாத்திரத்தில் நடிக்க காரணம் என்ன என்று கேட்டேன். அதற்கு அந்த நடிகை உங்களை போன்ற ஆன்ட்டி கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு இது எவ்வளவோ மேல் என்று பதில் அனுப்பினார்.
அந்த பதில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என வெளிப்படையாக சிம்ரன் பேசி இருந்தார். மேலும் அந்த நடிகை டப்பா ரோல் என்று விமர்சித்ததும் சிம்ரன் கூறியிருந்தார். இப்படியான நிலையில் மீண்டும் அந்த விவகாரம் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியுள்ள சிம்ரன், இங்கு எத்தனையோ வெப் சீரிஸ்கள் வருகிறது. அதில் டப்பா கார்டெல் நல்ல வெப் சீரிஸ் என்று நினைத்தேன். நான் இன்னும் அதனை பார்க்கவில்லை. நான் அன்றைக்கு சொன்னது மிகவும் சரியாக சென்று சேர்ந்துள்ளது. அது சரியாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் அன்று திட்டமிட்டு எதுவும் பேசவில்லை. அது உண்மையிலேயே எனக்கு நடந்தது.
அந்த மேடை எனக்கான மேடை என்பதால் நான் அதை பகிர்ந்து கொண்டேன். எனக்கென்று தனி நண்பர்கள் கிடையாது. இது குறித்து நான் பேசுவதற்கு. எனவே நான் அன்றைக்கு நடந்ததை பகிர்ந்து கொண்டேன். நான் எனக்கு நண்பர்கள் இல்லை என்று சொல்கிறேன் என்பதற்காக எனக்கு நண்பர்களே இல்லை என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். என்னுடைய மனப்பக்குவத்திற்கு ஏற்ற நண்பர்கள் எனக்கு உள்ளார்கள். நான் எப்போதும் எனது உலகத்தில் இருக்கவே விரும்புகின்றேன். அந்த நடிகை பேசியது எனக்கு மிகவும் காயத்தை ஏற்படுத்தியது. அன்றைக்கு நான் எனது ஆழ்மனதில் இருந்து தான் பேசினேன்.
அந்த நடிகை அவருடைய கருத்தை சொல்கிறேன் என்பதை புரிந்து கொள்கிறேன். ஆனால் அவரது வெளிப்படுத்த தேர்வு செய்த வார்த்தைகள் தான் என்னை மிகவும் காயப்படுத்தியது. அந்த சம்பவத்திற்கு பிறகு சம்பந்தப்பட்ட நடிகையிடம் இருந்து மன்னிப்பு கேட்டு எனக்கு மெசேஜ் வந்தது என்று சிம்ரன் பகிர்ந்து உள்ளார். அவரது இந்த பேட்டியில் தனக்கு அவ்வாறு மெசேஜ் செய்தது ஜோதிகா இல்லை என்று வெளிப்படையாக கூறாவிட்டாலும் இணையவாசிகள் தற்போது ஜோதிகாவை தான் கூறி வருகிறார்கள். ஜோதிகா தான் சிம்ரன் மனதை இப்படி காயப்படுத்தி இருக்க வேண்டும் என்று இணையத்தில் செய்திகள் உலா வரத் தொடங்கியுள்ளது.
கிழக்கு டெல்லி வினோத் நகர் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில், வாடிக்கையாளர் போல் நைசாக நுழைந்த மர்ம நபர் ஒருவர்…
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில், கடுமையான போதைப்பொருள் பயன்பாட்டிற்கு ஆளான நபர் ஒருவர் தன் நிலை மறந்து சாலையில் நிலைதடுமாறித்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியிலுள்ள ஒரு தங்கும் விடுதி அறையில், திருமணமான மூன்றே மாதங்களில் முஸ்கான் சிமோலியா என்ற…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, குடிபோதையில் பாலியல் வீடியோக்களைக் காட்டித் தொடர்ந்து சித்ரவதை செய்து வந்த கணவனைக் கொடூரமான முறையில்…
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி மற்றும் அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட லஞ்ச ஒழிப்பு வழக்கில், முன்னாள்…
திமுக இளைஞரணிச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், கட்சியின் மூத்த தலைவர்களுடன் போதிய தொடர்பில்லாமல் விலகியிருப்பது கட்சித் தலைவர்…