“படையப்பா” வெற்றியால் மெய்சிலிர்த்த நடிகர் ரஜினி… தயாரிப்பாளருக்கு 5 சவரன் தங்கச் சங்கிலி பரிசு…!!

Spread the love

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘படையப்பா’ திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் ரசிகர்களிடம் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது. 1999-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில், ரஜினிகாந்துடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அன்றே சாதனை படைத்த இப்படம், தமிழ் சினிமாவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

சமீபத்தில் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளான டிசம்பர் 12-ம் தேதியை முன்னிட்டு, ‘படையப்பா’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியானது. 25 ஆண்டுகள் கடந்த நிலையிலும், ரீ-ரிலீஸிலும் ரசிகர்கள் திரையரங்குகளில் உற்சாகமாகக் கொண்டாடினர். இந்தப் படம் தற்போதும் மிகப்பெரிய வசூலை ஈட்டியதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த ரஜினிகாந்த், ஏற்கனவே இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் தயாரிப்பாளர் தேனப்பன் ஆகியோரை நேரில் அழைத்துத் தனது பாராட்டுகளைத் தெரிவித்திருந்தார்.

தற்போது அந்த மகிழ்ச்சியின் தொடர்ச்சியாக, படையப்பா படத்தின் தயாரிப்பாளர் தேனப்பனை மீண்டும் நேரில் அழைத்த ரஜினிகாந்த், அவருக்கு 5 சவரன் தங்கச் சங்கிலியைப் பரிசாக வழங்கி கௌரவித்துள்ளார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ மற்றும் நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2’ ஆகிய படங்களில் ரஜினிகாந்த் பிஸியாக நடித்து வரும் நிலையிலும், தனது பழைய வெற்றிப் படக் கூட்டாளிகளை மறக்காமல் பாராட்டியுள்ளது திரைத்துறையினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த் தனது 173-வது படத்தில் இயக்குநர் சிபி சக்ரவர்த்தியுடன் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Soundarya

Recent Posts

“நீ எஸ்.சி.யா, பீஃப் சாப்பிடுவீயா…? வகுப்பறையில் கிண்டல் செய்த ஆசிரியர், சக மாணவர்கள்…. சிறுவன் எடுத்த விபரீத முடிவு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள கே.கே.நாயுடு அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்த அகிலன் என்ற…

6 மணத்தியாலங்கள் ago

திக் திக் திக்… ஓட்டல் வெளியே தூங்கிக் கொண்டிருந்த… இளைஞர் மீது மர்ம நபர்கள் கொடூரத் தாக்குதல்… பீகாரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!

பீகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் நடந்துள்ள இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டல் வெளியே தூங்கிக் கொண்டிருந்த…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… போதையில் பறந்த சொகுசு கார்… தலைகீழாக கவிழ்ந்த தம்பதியின் வாகனம்… ஹைதராபாத்தில் பகீர் சம்பவம்…!

ஹைதராபாத்-வாரங்கல் தேசிய நெடுஞ்சாலையில் பீர்கேடிகுடா பகுதியில் நடந்த விபத்தில், மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 19 வயது இளைஞர்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ பாவம்… மோட்டாரை சுத்தம் செய்த ஹார்டுவேர் கடைக்காரர்… மின்சாரம் தாக்கி பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணா தாலுகாவில் உள்ள பைலக்குப்பே நகரில், தண்ணீர் மோட்டாரை சுத்தம் செய்யும் போது மின்சாரம் தாக்கி பிரகாஷ்…

7 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஜாடையில் இருந்ததால் மாற்றி கொன்னுட்டோம்…” பாரில் அரங்கேறிய கொடூரம்… சிக்கிய 3 பேர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

கிருஷ்ணகிரி அருகே உள்ள தனியார் பார் ஒன்றில் மது அருந்திக் கொண்டிருந்த ஸ்டேஷனரி கடை உரிமையாளர் முகேஷ் (36) என்பவரின்…

7 மணத்தியாலங்கள் ago

“கணவரை இழந்த பெண்…” நண்பனை அழைத்து வந்த கள்ளக்காதலன்… இரண்டு பேருடன் ஏற்பட்ட பழக்கம்… கடைசியில் நடந்த பயங்கர சம்பவம்…!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாலி கிராமத்தைச் சேர்ந்த சின்னராஜ் (26) என்பவர், கள்ளக்காதல் விவகாரத்தில் அவரது நண்பர்களாலேயே…

7 மணத்தியாலங்கள் ago