உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள ஃபேதேஹாபாத் அருகே அமைந்துள்ள ராம்தாஸ் கி தார் சாச்சிபுரா கந்தேர் கிராமத்தில் அடிப்படை சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பிரசவ வலியால் அவதியுற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரீனா என்ற அப்பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மழைக்காலத்தில் கிராமத்திற்குச் செல்லும் பாதைகள் முழுவதும் சேறும் சகதியுமாக மாறி வெள்ளம் போல் தேங்குவதால், ஆம்புலன்ஸ் வாகனத்தால் கிராமத்திற்குள் வர முடியவில்லை. இதனால், கிராமத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வரை அப்பெண்ணைக் கட்டிலில் சுமந்து சென்றனர்.
கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி இதே கிராமத்தைச் சேர்ந்த சயாராம் என்பவர் சரியான சாலை வசதி இல்லாததால் மருத்துவமனைக்குக் தாமதமாகக் கொண்டு செல்லப்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 2026-லும் கிராமங்களுக்குச் சரியான சாலை வசதி இல்லாததும், அவசர காலங்களில் மக்கள் படும் அவதியும் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
வகுப்பறையில் மாணவன் ஒருவன் சக மாணவனை அதிவேகமாகக் கத்தியால் குத்திய விவகாரத்தில், தாக்குதலின் வேகம் காரணமாக ஆரம்பத்தில் தான் குத்தப்பட்டதே…
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன்ஸ் வளாகத்தில் நடைபெற்ற நவராத்திரி கொண்டாட்டங்களின் போது, இந்திய அணியின் முன்னாள் கேப்டன்…
பீகார் மாநிலம் பாட்னா பகுதியில், ஒரே ஒரு யூனிட் இரத்தத்திலிருந்து சில நிமிடங்களில் மூன்று யூனிட் போலி இரத்தம் தயாரிக்கும்…
கொல்கத்தா ஆயுதக் காவல் படையின் உதவி ஆய்வாளர் ஒருவர், பெண் தற்காலிக ஊர்க்காவல் படை வீராங்கனையை முறையற்ற விதத்தில் தொடுவது…
இந்தோனேசியாவில் உள்ள மவுண்ட் டுகோனோ எரிமலை திடீரென வெடித்துச் சிதறியதில், உச்சிப் பகுதிக்கு அருகில் சென்ற மூன்று மலையேறும் வீரர்கள்…
தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது தமிழக முதல்வர் விஜய் செல்லும் பாதையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவகாரத்தில், நாம் தமிழர் கட்சியின் மாநில…