2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட பிறகு, தனது செல்வாக்கை நிரூபிக்கப் போராடி வரும் அவருக்கு தற்போது மிகக் குறைவான வாய்ப்புகளே எஞ்சியுள்ளன. குறிப்பாக, அவரது முக்கிய ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்ததும், ராஜ்யசபா எம்பி தர்மர் எடப்பாடி பழனிசாமி அணிக்குச் சென்றதும் ஓபிஎஸ் தரப்பை அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்தியுள்ளது.
தற்போதைய அரசியல் சூழலில் ஓபிஎஸ் முன்னால் இரண்டு முக்கிய வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாகக் கருதப்படுகிறது. முதலாவது வாய்ப்பு, டிடிவி தினகரனின் அமமுகவுடன் கைகோர்ப்பது. ஏற்கனவே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இணைந்துள்ள நிலையில், ஓபிஎஸ்ஸையும் அக்கூட்டணிக்கு கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன. அமமுக சின்னமான குக்கர் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு 2 அல்லது 3 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், தனித்துவத்தை இழக்க விரும்பாத ஓபிஎஸ் தரப்பு இதற்கு இன்னும் பச்சைக்கொடி காட்டவில்லை.
மற்றொரு வாய்ப்பாகப் பார்க்கப்படுவது, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் இணைய பாஜக மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், விஜய்யுடன் கூட்டணி அமைப்பது ஓபிஎஸ்ஸுக்கு ஒரு கௌரவமான அரசியல் நகர்வாக இருக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர். மூன்று முறை தமிழக முதல்வராக இருந்த அனுபவம் கொண்ட ஓபிஎஸ், விஜய்யின் புதிய அரசியல் பயணத்திற்கு ஒரு அனுபவமிக்க பலமாக இருப்பார் என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் அடிபடுகிறது.
முடிவெடுப்பதில் ஏற்படும் தாமதம் ஓபிஎஸ் அணியினரிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது. தன் வசம் இருந்த செல்வாக்குமிக்க நிர்வாகிகள் ஒவ்வொருவராக மாற்று முகாம்களுக்குச் செல்வது அவருக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தன்னை மீண்டும் அதிமுகவில் சேர்க்கத் தயாராக இல்லாத நிலையில், வரும் தேர்தலில் தனது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள ஓபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு தமிழக அரசியலில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…