முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக திமுகவில் இணையப்போவதாக எழுந்த யூகங்களுக்கு, “பொறுமையாக இருங்கள்” எனப் பதிலளித்து மர்மம் நீடிக்கச் செய்துள்ளார். பிப்ரவரி 20, 2026 அன்று, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சட்டப்பேரவை வளாகத்தில் சந்தித்து, கடந்த ஐந்து ஆண்டுகால திமுக அரசின் சிறப்பான செயல்பாடுகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்கள் அவரிடம், “நீங்கள் திமுகவில் இணையப் போகிறீர்களா?” என்று நேரடியாகக் கேள்வி எழுப்பியபோது, புன்னகையுடன் “பொறுமையாக இருங்கள்” என்று கூறிவிட்டுச் சென்றார்.
இந்தச் சந்திப்பும் அவரது பதிலும் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஏற்கனவே அவரது அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான ஆர். வைத்திலிங்கம், பி.எச். மனோஜ் பாண்டியன் போன்றோர் திமுகவில் இணைந்துவிட்ட நிலையில், ஓபிஎஸ்-ன் இந்த நகர்வு அவர் திமுக தலைமையிலான கூட்டணியில் இணையலாம் அல்லது கட்சியில் இணையலாம் என்ற எதிர்பார்ப்பை வலுப்படுத்தியுள்ளது. இருப்பினும், கடந்த காலங்களில் இத்தகைய செய்திகளை அவர் “வதந்திகள்” என மறுத்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…