பாஜகவுக்கு ‘பம்பர் ஆஃபர்’ கொடுத்த ஓபிஎஸ்… திடீர் டெல்லி பயணம்.. அமித்ஷாவுடன் ரகசிய டீல்….!

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென டெல்லி செல்லத் திட்டமிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு’ என்ற பெயரில் தனிப்பயணம் மேற்கொண்டு வந்த அவர், தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து கூட்டணியை உறுதி செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது என்டிஏ கூட்டணிக்குள் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமித் ஷாவுடனான இந்த முக்கிய சந்திப்பில், ஓபிஎஸ் தரப்பில் இரண்டு ரகசிய வாக்குறுதிகள் கேட்கப்படலாம் எனத் தெரிகிறது. குறிப்பாக, தனது ஆதரவாளர்களுக்குத் தேவையான தொகுதிகளைப் பெறுவதோடு, தனது மகன் ரவீந்திரநாத்திற்கு பெரியகுளம் தொகுதியை உறுதி செய்ய வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. தான் நேரடியாகப் போட்டியிடாமல், மாநிலம் தழுவிய அளவில் கூட்டணிக்கு ஆதரவாகப் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர் பாஜக தலைமைக்கு ‘பம்பர் ஆஃபர்’ ஒன்றை வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.

இந்த திடீர் நகர்வுக்குப் பின்னால் டெல்லி தலைமையின் அழுத்தம் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை ஒரே அணியில் திரட்டுவதன் மூலம், தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளை ஒருங்கிணைக்க பாஜக திட்டமிடுகிறது. “ஓபிஎஸ்ஸைச் சேர்க்க இடமே இல்லை” என்று கூறிவந்த எடப்பாடி பழனிசாமி, தற்போது டெல்லியின் தலையீட்டால் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பிப்ரவரி 1-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வரும்போது, அவரோடு ஓபிஎஸ் ஒரே மேடையில் தோன்றும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிதறிக்கிடக்கும் அதிமுக பிரிவுகளை ஒன்றிணைப்பதன் மூலம், திமுக அரசுக்கு எதிராக ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. இந்த அதிரடி மாற்றங்கள் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Nanthini

Recent Posts

எனக்கு வாழவே பிடிக்கவில்லை… நீட் மாணவியை 3 முறை தற்கொலைக்குத் தூண்டிய அரிய நோய்… அதிர்ச்சிப் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னது இது?… உயிரைப் பணயம் வைத்து இப்படியொரு ரீல்ஸ் தேவையா?… ஓடும் பேருந்திலிருந்து இறங்கி டிரைவர் செய்த காரியம்… இணையத்தில் வைரல் வீடியோவால்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…

2 மணத்தியாலங்கள் ago

அய்யோ அடிக்காதீங்க… அலறிய இளைஞர்… சிறு விபத்தால் வெடித்த வன்முறை… ஸ்கூட்டரை விட்டு ஓடிய பரிதாபம்… கான்பூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… டிக்டாக் மோகத்தால் நேர்ந்த விபரீதம்… கூண்டிலிருந்து வெளியே விடப்பட்ட பெண் புலி… கடித்துக் குதறியதில் 19 வயது இளைஞர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…

2 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… தீபாவளி கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்… பூஜை விளக்கால் வீட்டிற்குள் எதிர்பாராத விபரீதம்… பதறவைக்கும் வீடியோ…!

தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…

3 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… வீட்டிற்குள் புகுந்து மத்திய அரசு ஊழியரின் மனைவி கொடூரமாகப் படுகொலை… ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்… பின்னணி என்ன?…

ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…

3 மணத்தியாலங்கள் ago