ஜெயிலுக்கு போக வேண்டியவர் எடப்பாடி… அவரை காப்பாற்றியது யார் தெரியுமா..? பகீர் கிளப்பிய ஓபிஎஸ்..!!

Spread the love

தேனி மாவட்டம் போடியில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் உரையாற்றிய திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். தான் திமுகவில் இணைந்ததை தமிழக மக்கள் அனைவரும் வரவேற்பதாகக் குறிப்பிட்ட அவர், பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரின் பக்குவத்தைப் பெற்று அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஆற்றல் கொண்ட ஒரே தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் மட்டுமே என்று புகழாரம் சூட்டினார். மேலும், திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து எந்தக் கட்சியும் வெளியேறவில்லை என்பது ஸ்டாலினின் தலைமைக்குக் கிடைத்த வெற்றி என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் நாகரீகம் இல்லை என்றும், அவருக்கு வரும் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்காது என்பதால் தற்போது ‘மூளை அவுட்’ ஆகிவிட்டதாகவும் சாடினார். “கலைஞர் குறித்துப் பேச எடப்பாடிக்கு என்ன தகுதி இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பிய அவர், எடப்பாடி பழனிசாமி அரசியலுக்கு வந்த வரலாற்றையும், அவர் சிறைக்குச் செல்வதிலிருந்து யார் காப்பாற்றினார்கள் என்பதையும் மக்கள் மறக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார். ஈபிஎஸ் தன்னைத் துரோகி என்று அழைப்பதற்குப் பதிலடியாக, உண்மையான துரோகத்தை இழைத்தது எடப்பாடி தான் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

மக்களுக்காகப் பல நற்பணிகளைச் செய்த முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து மட்டுமே மக்கள் பேசி வருவதாகவும், அதிமுகவைப் பற்றியோ அதன் தலைவர்கள் குறித்தோ யாரும் கவலைப்படுவதில்லை என்றும் ஓபிஎஸ் விமர்சித்தார். தோல்வி பயத்தால் எடப்பாடி பழனிசாமி மேடைகளில் கத்துவதாகவும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவருக்குப் படுதோல்வி நிச்சயம் என்றும் அவர் சூளுரைத்தார். சமூக நீதிக்காகப் போராடிய கலைஞரைப் பற்றிப் பேச எடப்பாடிக்கு எந்த அருகதையும் இல்லை என்று கூறிய ஓபிஎஸ், வரும் தேர்தலில் அதிமுக ஒரு இடத்தில் கூட ஜெயிக்க முடியாது என்று ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

Soundarya

Recent Posts

“புலி இப்போது ‘பல் இழந்த புலி’ ஆனது எப்படி?… அமெரிக்க தேர்தலின் யாரும் எதிர்பாராத மறுபக்கம்”…. இனி டிரம்ப் ஒன்னுமே செய்ய முடியாதா?….!

அமெரிக்க இடைக்காலத் (மிட் டேர்ம்) தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி அடைந்த பெரும் தோல்வி, அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அரசியல்…

10 minutes ago

“புர்ஜ் கலிஃபா உயரத்திற்கு ஒரு எஸ்கலேட்டர்… மேலே போனா கீழே இறங்க வழியில்லையா?”…. வெளிநாட்டுப் பெண்மணிக்கு நடந்த பகீர் அனுபவம்… வைரல் வீடியோ….!

உலகிலேயே மிகவும் விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான நகரப் போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக ஹாங்காங்கில் உள்ள 'சென்ட்ரல் மிட் லெவல்ஸ் எஸ்கலேட்டர்'…

20 minutes ago

ரூ.4,730 கோடி ஆற்று மணல் கொள்ளை…. விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு… சிக்கிய முக்கிய ஆவணங்கள்…. தமிழகத்தையே உலுக்கும் புதிய எஃப்.ஐ.ஆர்…!

தமிழகத்தில் அரசு ஆற்று மணல் குவாரிகளில் நடைபெற்ற மாபெரும் முறைகேடு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள புதிய முதல் தகவல் அறிக்கையின்…

26 minutes ago

கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.25 லட்சம்னு ஏலம் விடுறாங்க…. ரூ.15 கோடி பேரம் விவகாரம்…. அதிர வைக்கும் ஆடியோ பின்னணி…. செல்லூர் ராஜூவின் செம அடி….!

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்து…

32 minutes ago

“விஜய் அமைதியா இருக்கார்னா சும்மா இல்லை.. மாஸ் பிளான் பண்றாரு”…. இனிதான் இருக்கு கச்சேரி…. மேடையில் போட்டுடைத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா….!

அரசியல் களத்தில் தனக்கெனத் தனிப்பாதையை அமைத்து, மாற்று அரசியலை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றி கழகம் அரியணை ஏறி…

39 minutes ago

அடச்சீ நீயெல்லாம் ஒரு தாயா?….. பெற்ற மகளுக்கே தாயே செய்த காரியம்.. 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை….. அதிர்ச்சியில் உறைந்த ஆவடி….!

சென்னை ஆவடி பகுதியில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.…

44 minutes ago