அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்..? “அந்த பதவி கொடுங்க” பாஜக மூலம் EPS-க்கு ரகசிய தூது… புதிய திருப்பத்தில் ADMK..!!

Spread the love

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் கட்சியில் இணைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஓபிஎஸ்ஸை மீண்டும் கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்து வரும் நிலையில், ஓபிஎஸ் தனது அரசியல் எதிர்காலத்தைத் தக்கவைக்க பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக அவர் அண்மையில் திமுக தரப்புடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

இருப்பினும், திமுக தரப்பிலிருந்து ஓபிஎஸ் எதிர்பார்த்த சாதகமான பதில் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. திமுகவில் இணைவதோ அல்லது அங்கு கூட்டணி அமைப்பதோ தற்போதைய சூழலில் சாத்தியமில்லை என்பதை உணர்ந்த ஓபிஎஸ், மீண்டும் அதிமுகவிலேயே கௌரவமான ஒரு இடத்தைப் பெறுவதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்துள்ளார். இதற்காக அவர் பாஜக மேலிடத் தலைவர்கள் மூலமாக எடப்பாடி பழனிசாமிக்குத் தூது அனுப்பி வருவதாகவும், கட்சியில் தனக்குத் தகுந்த பதவி வழங்கப்பட்டால் இணைந்து செயல்படத் தயார் என விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்போ ஓபிஎஸ்ஸை மீண்டும் சேர்ப்பது கட்சியின் ஒற்றுமையை பாதிக்கும் என்பதில் உறுதியாக உள்ளது. குறிப்பாக, அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் போன்ற ‘துரோகிகளுக்கு’ கட்சியில் இடமில்லை என மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தினார். இதனால், பாஜகவின் அழுத்தம் எடப்பாடி பழனிசாமியின் முடிவை மாற்றுமா அல்லது ஓபிஎஸ்ஸின் அரசியல் பயணம் புதிய திசையை நோக்கி நகருமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.
Soundarya

Recent Posts

‘அதிமுகவை தொட்டால் நீ காலி”… வரி ஏய்ப்பு செய்யும் விஜய் ஊழலை பற்றி பேசலாமா?… பனையூர் பண்ணையாரை கிழித்து தொங்கவிட்ட ஜெயக்குமார்…..!

தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அதிமுக இடையே கருத்து மோதல் வலுத்து வருகிறது. சமீபத்தில்…

2 minutes ago

கொடூரத்தின் உச்சம்… பெற்ற மகனை பெட்டிக்குள் போட்டு அடைத்த தந்தை.. வீடு திரும்பிய தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி….!

உத்தரப்பிரதேச மாநிலம் பெரோசாபாத் மாவட்டத்தில், குடிபோதைக்கு அடிமையான தந்தை ஒருவன் தனது 12 வயது மகனை கத்தியால் குத்திக்கொலை செய்து,…

10 minutes ago

“வண்டி இல்ல.. பெட்ரோல் இல்ல”.. விஜய்யை பங்கமாக கலாய்த்த அண்ணாமலை… பரபரக்கும் அரசியல் களம்….!

தமிழக அரசியலில் 'என்ஜின்' குறித்த விவாதம் தற்போது அண்ணாமலை மற்றும் விஜய் இடையேயான வார்த்தைப் போராக உருவெடுத்துள்ளது. தமிழக வெற்றிக்…

20 minutes ago

2026-ல் விஜய்யின் ஓட்டு வங்கி எவ்வளவு?… டெல்லிக்கு பறந்த ரகசிய ரிப்போர்ட்…. கலக்கத்தில் திராவிடக் கட்சிகள்….!

தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம்  ஏற்படுத்தி வரும் தாக்கம் குறித்து பாஜகவின்  டெல்லி தலைமைக்கு…

25 minutes ago

விஜய் கொடுத்த ஆஃபர்… ராகுல் எடுத்த திடீர் முடிவு…. தமிழக அரசியலை மாற்றியமைக்கும் ‘விட்டமின் எம்’….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், காங்கிரஸ் கட்சி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன்  கூட்டணி…

31 minutes ago

“இனி TVK -ல தான் எனக்கு வேலை”.. விஜய்யின் கட்சிக்காக வேலையை தூக்கி வீசிய தொண்டர்… வைரலாகும் ராஜினாமா கடிதம்..!

தமிழக அரசியலில் தற்போதைய பேசுபொருளாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) மீதான ஆர்வம், இளைஞர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில்…

36 minutes ago