தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க நாளுக்கு நாள் தேர்தல் களமும் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக விஜயின் தமிழக வெற்றி கழகம் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள உள்ளதால் இந்த தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. இதனிடையே தமிழக வெற்றி கழகம் உயர்மட்ட நிர்வாக குழு மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, ஓபிஎஸ் அனைத்து மாவட்ட செயலாளர்களுடனும் நடத்திய ஆலோசனைப்படி எந்த காலகட்டத்திலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்ளப் போவதில்லை என்று உறுதி அளித்துள்ளார்.
விரைவில் நல்ல முடிவை எடுப்பார். இந்த பொங்கலுக்கு பிறகு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை பார்க்கலாம். பொங்கலுக்கு பிறகு அதிமுகவிலிருந்து பலரும் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு வர உள்ளனர். அமமுக எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. வருகின்ற டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மலேசியாவில் தனது படம் தொடர்பான நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொள்ள உள்ளார். அதன் பிறகு எந்தெந்த மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய உள்ளார் என்பது அறிவிக்கப்படும். 2026 ஆம் ஆண்டு அவர் ஆட்சி பீடத்தில் அமர்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. கூட்டம் கூட்டுவதற்கு அனைவரும் செலவு செய்கிறார்கள். ஆனால் செலவே செய்யாமல் அவருக்கு கூட்டம் கூடுகிறது. எதிர்கால தமிழகத்தை விஜய் ஆளவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…