தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த முறை எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என அதிமுக பல வியூகங்களை வகுத்து வரும் நிலையில் மீண்டும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என பலரும் குரல் எழுப்பி வருகிறார்கள். அதன்படி NDA கூட்டணியில் இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை கூட்டணியில் இணைய மாட்டோம் என டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் கூறி வருகிறார்கள் . தற்போது அவர்கள் இருவருமே பாஜகவுடன் தொடர்ந்து நெருக்கம் காட்டி வரும் நிலையில் கூட்டணி குறித்து அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாமல் உள்ளனர்.
அதே சமயம் சமீபத்தில் புதிய கட்சியை தொடங்கிய ஓபிஎஸ் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பும் தொடர்ந்து நிலவி வருகிறது. இந்நிலையில் 2026 தேர்தலுக்கு ஓபிஎஸ் திமுக கூட்டணியில் இணைவதே எங்கள் விருப்பம் என்று அவருடைய ஆதரவாளர் சுப்புரத்தினம் கூறியுள்ளார். திமுகவுக்கே ஜெயிக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறிய அவர், அந்தக் கூட்டணிக்கு சென்றால்தான் போதிய மரியாதையும் கிடைக்கும் என்று பேசியுள்ளார். மேலும் முதலில் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து அதன் பிறகு கட்சியை இணைத்து விடலாம் என்று ஓபிஎஸ் இடம் வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…