கர்நாடக மாநிலம் அலங்காறு பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நெஞ்சை நடுங்க வைக்கும் பயங்கர விபத்து ஒன்று அரங்கேறியுள்ளது. அலங்காறு கிராமம் நதிளா பகுதியைச் சேர்ந்த 42 வயதான லோகேஷ் என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த எஸ்யூவி கார் ஒன்று பைக் மீது கொடூரமாக மோதிவிட்டு நிற்காமல் தப்பியோடியது.
இந்த கோர விபத்தில் தூக்கி வீசப்பட்ட லோகேஷின் தலை மற்றும் உடல் உறுப்புகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நள்ளிரவில் சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் உப்பினங்கடி நோக்கித் தப்பியோடியதாக கிடைத்தத் தகவலையடுத்து, அலங்காறு இளைஞர்கள் அத்தூர், ராமகுஞ்சா, நெல்யாடி உள்ளிட்ட பல பகுதிகளுக்குத் தகவல் கொடுத்துத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
அப்போது நடுகுட்டே பகுதியில் உள்ள வீடு ஒன்றின் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, அந்த கார் அங்குச் சென்றது தெரியவந்தது. போலிஸாரும் உள்ளூர்வாசிகளும் இணைந்து நடத்திய சோதனையில், அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முற்றத்தில் கார் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கார் பிடிபட்டதால் அப்பகுதியில் கடும் பதற்றம் நிலவிய நிலையில், கடபா போலிஸார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்து காரைப் பறிமுதல் செய்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த கார் உள்ளூர் ஹோட்டல் அதிபர் ஒருவருக்குச் சொந்தமானது என்றும், விபத்து நடந்தபோது அவரது சகோதரர் வாகனத்தை ஓட்டிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அருண் குமார் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். உயிரிழந்த லோகேஷுக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இச்சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளில் வெனிசுலா மற்றும் பிரேசில் எல்லைகளில் வாழ்ந்து வரும் யனோமாமி பழங்குடி இன மக்கள், இயற்கை…
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில்…
சென்னை பாலவாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் விவேக் (38). இவருக்கும் முத்து பிரியாவுக்கும் (33) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…
கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியைச் சேர்ந்த 38 வயதுப் பெண்ணான ரேகா, தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக…
கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்தியாவிற்கும் தற்போதைய நவீன இந்தியாவிற்கும் இடையே…
பெங்களூருவில் உள்ள ஃபோரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில் இயங்கி வந்த ஜூஸ் கடை, பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும்…