திக் திக் நிமிடம்!… சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் பலி… 9 பேர் கவலைக்கிடம்… கிராமத்தையே உலுக்கிய வெடிவிபத்து…!!!

Spread the love

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கம்பக்கோட்டை பட்டாசு ஆலையில் இன்று நிகழ்ந்த பயங்கர வெடிவிபத்தில், அடையாளம் காண முடியாத அளவிற்கு உடல் கருகி ஒரு தொழிலாளி உயிரிழந்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது, அடுத்தடுத்து நான்கு முறை பட்டாசுகள் வெடித்து சிதறியதால் அந்தப் பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. இந்த விபத்தில் காயமடைந்த 9 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த நபர் யார் என்பது குறித்தும், விபத்துக்கான காரணம் குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

“குட்டி ஜப்பான்” எனப்படும் சிவகாசி மற்றும் அதன் அருகிலுள்ள சாத்தூர் பகுதிகளில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமலும் முறையான அனுமதியின்றியும் பல பட்டாசு ஆலைகள் செயல்படுவதாகத் தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன. இத்தகைய விதிமீறல்களால் அடிக்கடி ஏற்படும் விபத்துகள் அப்பாவி தொழிலாளர்களின் உயிரைப் பறிப்பதோடு, பலரை உடல் உறுப்புகளை இழக்கச் செய்து வாழ்வாதாரத்தைப் பாதிக்கிறது. அண்மையில் உயிரிழப்பு எண்ணிக்கை 16 ஆக உயர்ந்த சோகம் மறைவதற்குள், மீண்டும் ஒரு விபத்து நிகழ்ந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

BREAKING: நீட் தேர்வில் மிகப்பெரிய மாற்றம்?…. சற்றுமுன் பிரதமர் மோடி வெளியிட்ட அந்த ஒரு முக்கிய அறிவிப்பு….!

நீட் மற்றும் பிற தகுதித்தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய போராட்டம், நாடு முழுவதும் பரவி பெரும்…

4 minutes ago

BREAKING: “நான் பதவி விலகுகிறேன்”…. பரவும் கடிதமும்.. டெல்லியில் சூடுபிடிக்கும் போராட்டமும்…. சற்றுமுன் பரபரப்பு….!

மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று, கடந்த 21-ஆம் தேதியே தனது பதவியை…

12 minutes ago

மரணத்தின் விளிம்பில் போராட்டம்…! 500 அடி பள்ளத்தில் விழுந்த சென்னை சுற்றுலாப் பயணி… கொழுக்குமலை டிரெக்கிங்கில் கொடூர விபத்து…!!

கொழுக்குமலைப் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த சென்னையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி கார்த்திக்(31) என்பவர், எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்து சுமார் 500…

15 minutes ago

திடீரென முடக்கப்பட்ட மெரினா…. அலர்ட்டான போலீஸ்…. பொதுமக்கள் உள்ளே செல்லத் தடை… சென்னையில் உச்சகட்ட பரபரப்பு….!

சென்னை மெரினா கடற்கரையில் நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள் திரளக் கூடும் என்ற ரகசியத் தகவலின் அடிப்படையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப்…

18 minutes ago

“2 வருடங்களில் CM… அடுத்தது PM?”…. திமுக, அதிமுகவுக்கு ஷாக்… 2029 பிரதமர் ரேஸில் விஜய்?…. காங்கிரஸை அலறவிடும் தவெக கணக்கு….!

தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக இருந்துவந்த திமுக-அதிமுக என்ற இருமுனைப் போட்டியை உடைத்து, புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல்களும்…

23 minutes ago

திமுகவை விட்டு வந்ததே தப்பா போச்சு?… குரலை இழந்த காங்கிரஸ், விசிக – தவெக கூட்டணியில் நடப்பது என்ன?…. அதிர்ச்சியில் தமிழக அரசியல் களம்…!

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில், தன் கூட்டணிக் கட்சிகளுக்குத் தகுந்த முக்கியத்துவமும் ஊடக வெளிச்சமும் வழங்கி, அவர்களைத் தேசிய மற்றும் மாநில…

31 minutes ago