பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளராக களம் இறங்கி இருப்பவர் ராப் பாடகர் ஆரியன் தினேஷ் கனகரத்தினம் இவரை ADK என்று சுருங்க அழைக்கின்றனர். இவர் தனது முன்னாள் மனைவி மற்றும் மகனுடன் இருக்கும் அழகான குடும்ப புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது தற்பொழுது சண்டைக்கும் சர்ச்சைக்கும் பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தற்பொழுது 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் ADK என அழைக்கப்படும் ஆரியன் தினேஷ் கனகரத்தினமும் ஒருவர். பாடகர் ஆன இவர் நடிகர், இயக்குனர், எழுத்தாளர் என பல முகங்களைக் கொண்டவர்.

அவரே பாடல் வரிகளை எழுதி அதை பாடுவார். இலங்கையைச் சேர்ந்த இவர் பல தமிழ் படங்களில் பாடல்களை பாடியுள்ளார். சில குறும்படங்களையும் இயக்கி நடித்துள்ளார். குறிப்பாக ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கும் படங்களில் ஆரியன் தினேஷிற்கு மறக்காமல் வாய்ப்பு வழங்கப்படும்.
இவர் 2012 இல் வெளியான ‘ஆர்யன்’ என்ற இசை ஆல்பம் மூலம் மிகப் பிரபலமானார். இதைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி இசையமைப்பில் வெளியான ‘ஆத்திச்சூடி’ என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார். டி இமான், சந்தோஷ் நாராயணன், ஹரிஷ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா போன்ற முன்னணி இசையமைப்பாளர்களுடன் கலந்து பயணித்து கலக்கியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் ADKவிற்கு சில நெகட்டிவான கமெண்ட்களும் அதேசமயம் பாராட்டுகளையும் மாறி மாறி பெற்று வருகிறார். போன வாரத்தில் அமுதவாணன் கலாய்த்து இவர் பாடியது வீட்டில் இருக்கும் சகஹவுஸ்மேட்களை ரசிக்க வைத்தது. இவ்வாறு பிக் பாஸ் வீட்டில் கலக்கிக் கொண்டு வருகிறார் ADK.

இந்நிலையில் ADK முன்னாள் மனைவியான ஜாஸ்மின் மற்றும் அவருடைய மகன் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. பாடகர் ADK ஜாஸ்மின் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் விவாகரத்து செய்தனர்.
தற்பொழுது ADK தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட அழகான குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்…..

