அதிமுக, திமுக முடிவில் மாற்றம்… தியாகிகளுக்கு கொடுத்த மாஸ் கவுரவம்… தமிழ்நாடு தினத்தில் முதலமைச்சர் விஜய் எடுத்த அதிரடி முடிவு…!

Spread the love

தமிழ்நாட்டின் முக்கிய வரலாற்று தினங்களான ஜூலை 18 மற்றும் நவம்பர் 1 ஆகிய இரு தேதிகளையும் தமிழக அரசால் அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 1967-ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று பேரறிஞர் அண்ணா அவர்களால் சட்டமன்றத்தில் சென்னை மாகாணத்திற்கு “தமிழ்நாடு” எனப் பெயர் சூட்டும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த முக்கிய தினத்தில், தமிழரின் தொன்மை, பண்பாடு மற்றும் மொழியுணர்வைப் போற்றி ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் முதலமைச்சர் தனது நெஞ்சார்ந்த ‘தமிழ்நாடு நாள்’ வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

முன்னதாக, கடந்த 1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினத்தை அடிப்படையாகக் கொண்டு, முந்தைய அதிமுக அரசு நவம்பர் 1-ஐ தமிழ்நாடு நாளாக அறிவித்தது. ஆனால், 2021-ல் பொறுப்பேற்ற திமுக அரசு, அண்ணா தீர்மானம் நிறைவேற்றிய ஜூலை 18-ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக மாற்றியமைத்தது. திமுகவின் இந்த முடிவிற்குப் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு, இரு தரப்பு நியாயங்களையும் ஏற்றுக்கொண்டு இரண்டு தினங்களையும் அரசு விழாவாகக் கொண்டாட முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக முதலமைச்சர் விஜய் விடுத்துள்ள அறிக்கையில், மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1-ஆம் தேதியையும், தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஆம் தேதியையும் இந்த அரசு சிறப்பாகக் கொண்டாடும் என உறுதியளித்துள்ளார். மேலும், சமத்துவமும் சமூகநீதியும் தழைத்தோங்கும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்ற இந்நாளில் உறுதியேற்போம் என்று குறிப்பிட்ட அவர், தமிழ்நாடு உருவாகப் பாடுபட்ட தியாக சீலர்களை நினைவுகூர்ந்து தனது மரியாதையைச் செலுத்தியுள்ளார்.

Visaka

Recent Posts

பட்டப்பகலில் பயங்கரம்…! நடந்து சென்ற பெண்களிடம் வேலையை காட்டிய வாலிபர்கள்… இணையத்தில் தீயாய் பரவும் சிசிடிவி காட்சிகள்…!!

தெலங்கானா மாநிலம் ஜன்காமா பகுதியில் உள்ள நெசவாளர் காலனியில் இரண்டு பெண்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு சங்கிலி…

15 minutes ago

BREAKING: 5 திமுக MLA-க்கள் ராஜினாமா?….. தவெக விரித்த பனையூர் வலை…. திமுகவை அதிர வைக்கும் ரகசிய ரிப்போர்ட்….!

திமுகவில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக மாற்றங்களால் சில சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர்கள்…

20 minutes ago

“வருங்கால PM விஜய்யா? ராகுல் காந்தியா?”…. காங்கிரஸின் அதிரடி முடிவால் தவெக கூட்டணியில் புயல்…. பரபரப்பில் தமிழக அரசியல்…!

எதிர்காலப் பிரதமர் விவகாரம் தொடர்பாகத் தவெக மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடையே எழுந்துள்ள கருத்து வேறுபாடுகள் அரசியல் களத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளன.…

26 minutes ago

“இப்படி பேச அசிங்கமா இல்லையா?….. நாவடக்கம் தேவை செங்கோட்டையன்”…. கொதித்தெழுந்த மதிமுக… தமிழ்நாடு அரசியலில் திடீர் பரபரப்பு….!

தவெக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனின் சமீபத்திய பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து, மதிமுக பொருளாளர் மு. செந்திலதிபன் காரசாரமான கண்டன அறிக்கை…

30 minutes ago

மகளிருக்கு ஜாக்பாட்…. உரிமைத் தொகையை உயர்த்தும் CM விஜய்?…. அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!

மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி ஆதாரங்களைப் பெற்று, மகளிருக்கான உரிமைத் தொகையை முதல்வர் விஜய் உயர்த்தி வழங்குவார் என…

36 minutes ago

“தவெகவுடன் அதிமுக  கூட்டணி…. இணைந்து 3 வாரம் ஆச்சு”…. புதுக்கோட்டையில் கு.ப.கிருஷ்ணன் போட்ட வெடி…. தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

"அதிமுக, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து மூன்று வாரங்களுக்கு மேலாகிவிட்டது" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச்…

40 minutes ago